
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர்கள் நடிகை ஓவியா மற்றும் சினேகன். கவிஞர் சினேகன் பல ஹிட் பாடல்களைக் கொடுத்திருந்தாலும், கடந்த சில வருடங்களாக புது பாடலாசிரியர்கள் வருகையால் இவருக்கு பாடல் எழுத வாய்ப்புகள் சரியாக அமையவில்லை.
மேலும் சினேகன் உயர்திரு 420 என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்தும், அது அவருக்கு பெரிதாகக் கைகொடுக்க வில்லை.
இந்நிலையில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடினார் சினேகன். ஏற்கெனவே டைனமிக் திருமணம் என்கிற கட்டிப்புடி கல்யாண சர்ச்சையில் சிக்கிய இவர் இங்கும் இவரின் கட்டிப்புடி வைத்தியத்தை பிரபலப்படுத்தினார் என்பது அனைவரும் அறிந்தது தான்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சாமர்த்தியமாக 100 நாள் விளையாடி இரண்டாவது இடத்தைப் பிடித்த சினேகன். தற்போது இவர், இதே நிகழ்ச்சியின் மூலம் ஓட்டுமொத்த ரசிகர்கள் மனதையும் கொள்ளை கொண்ட நாயகி ஓவியா நடிக்கும் படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
இன்னும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தை இசையமைப்பாளர் சத்தியா தயாரிக்க உள்ளார். விரைவில் இந்தப் படத்தைப் பற்றிய மற்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.