
நடிகை சிநேகா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர், இவருடைய சிரிப்பிற்கு இன்று வரை பல ரசிகர்கள் உள்ளனர். ஆனால் இவர் திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தும் பொறுப்பான மனைவியாகவும், ஒரு தாயாகவும் பட வாய்ப்பைவிட குடும்பத்தை கவனிப்பது அவசியம் என்கிற எண்ணத்தில் தேடி வந்த வாய்ப்புகளை ஏற்கவில்லை.
இந்நிலையில் தற்போது இவர் நடிப்பில் பல வருடங்கள் கழித்து வெளியான திரைப்படம் 'வேலைக்காரன்' சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து நயன்தாரா நாயகியாக நடித்துள்ள திரைப்படம். அனைத்துத் தரப்பு ரசிகர்களின் ஆதரவையும் பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. வசூல் ரீதியாகவும் படம் விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தைக் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்படி நல்ல விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படம் தன்னை அவமானப்படுத்தி விட்டதாக நடிகை சிநேகா மிகுத்த மனவருத்தத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் சிநேகா இந்தப் படத்தில் நடித்து பிட்டு பிட்டாக 5 நிமிடங்கள் மட்டுமே வந்துள்ளது. இது தான் சினேகாவின் கோபத்திற்கு காரணமாம்!
இந்தப் படத்திற்காக தன்னுடைய எடையை 7 கிலோ அளவிற்குக் குறைத்தாராம். தொடர்ந்து 18 நாட்கள் இந்த படத்திற்காக கால் ஷீட் கொடுத்துள்ளாராம். ஆனால் இவ்வளவு கஷ்டப்பட்டு நடித்தும் இவர் நடித்த பல காட்சிகள் இந்தப் படத்தில் இடம் பெறாதது தான் வேதனை.
இதுகுறித்து சிநேகா கூறியுள்ளதாக உலாவரும் தகவல்...பிரசவத்திற்குப் பின் உடல் எடையைக் குறைப்பது என்பது மிகவும் சவாலான விஷயம். இந்தப் படத்திற்காக நான் அதைச் செய்தேன்... ஆனால் இந்தப் படத்திற்காக நான் உடல் எடையைக் குறைத்துள்ளேன் என்பதைக் கூட தெரிந்து கொள்ள முடியாத அளவுக்கு என்னுடைய காட்சிகள் இடம்பெற்றுள்ளன. என் இதுவரையிலான சினிமா அனுபவத்தில் வேலைக்காரன் படம் போல் எந்த ஒரு படத்திலும் என்னை அவமானப்படுத்தியது இல்லை என்று புலம்பி வருகிறாராம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.