
நவரச நாயகன் கார்த்தி சினிமாவில் நடிகராக அசைக்க முடியாத இடத்தைப் பிடித்தவர். இவரின் பேச்சு பாணிக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.
அண்மைக் காலமாக வில்லன் மற்றும் சிறந்த கதையம்சம் கொண்ட படங்களை மட்டுமே இவர் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவருடைய முதல் மகன் கெளதம் கார்த்தி தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராகி விட வேண்டும் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
அந்த வகையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த இந்திரஜித் திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பைப் பெறாவிட்டாலும் குழந்தைகள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் இந்தப் படத்தில் நடித்த கெளதம் கார்த்தியை மையப்படுத்தி குழந்தைகளுக்கு காமிக்ஸ் கதைகளும் வெளியிடப்பட்டன.
இவர் நடிப்பில் வெளிவந்த ஹர ஹர மகாதேவகி திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படி ஓரளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்ட இவரைத் தொடர்ந்து, இவருடைய தம்பியும் சினிமாவிற்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கெளதம் கார்த்தியின் கடைசி தம்பி அதாவது, கார்த்தியின் மூன்றாவது மகன் புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது. அந்தப் புகைப்படம் இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.