சின்னத்திரை நிகழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுத தாடி பாலாஜி..!

 
Published : Dec 28, 2017, 02:05 PM ISTUpdated : Sep 19, 2018, 01:44 AM IST
சின்னத்திரை நிகழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுத தாடி பாலாஜி..!

சுருக்கம்

actor balaji cry in famouse programme

காமெடி நடிகர் தாடி பாலாஜி, விஜய் அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து அனைத்துத் தரப்பு ரசிகர்களாலும் நன்கு அறியப்பட்டவர். அண்மைக் காலமாக வாழ்க்கையில் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறார்.

ஏற்கெனவே முதல் மனைவியோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று, இரண்டாவதாக நிதியா என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணமானது முதல் பலரது பார்வைக்கும் சிறந்த தம்பதிகளாக தெரிந்த இவர்களது வாழ்க்கையில்  ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளால், போலீஸ், கோர்ட் என தற்போது விவாகரத்தில் வந்து நிற்கிறது. 

இந்நிலையில் தற்போது தனிமையில் இருந்து வரும் இவர் பிரபல தொலைக்கட்சியில் காமெடி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் சமீபத்தில் குழந்தைகள் பங்கு பெறும் கிங்க்ஸ் ஆப் காமெடி என்கிற நிகழ்ச்சியில் சிறப்பு விருதினராகக் கலந்துகொண்டார்.

அப்போது அங்கே குழந்தைகள் ஆடுவதையும், பாடுவதையும் கண்டு இவர்களைப் பார்க்கும் போது என் மகள் போர்ஷிகா நினைவுதான் வருகிறது... என்று சொல்லி அழத் தொடங்கி விட்டார்... பின் தன்னுடைய மனதை சமாதானம் செய்துகொண்டு மீண்டும் நிகழ்ச்சியில் கவனம் செலுத்தினார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!