
தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்த நட்சத்திர ஜோடிகளின் சினேகா, பிரசன்னா முக்கியமானவர்கள் . இது வரை எந்த ஒரு பிரச்னையும் இல்லாமல் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களுக்கு விஹான் என்கிற இரண்டு வயது மகன் இருக்கிறான். இந்நிலையில் திருமணதிற்கு பிறகு, குழந்தை குடும்பம் என பொறுப்பான குடும்பத்தலைவியாக சினேகா மாறினார்.
தற்போது மீண்டும் நீண்ட இடைவேளைக்கு பிறகு சின்னத்திரை மற்றும் ஒரு சில படங்களில் நடிக்கத் துவங்கிவிட்டார், பிரசன்னாவும் தற்போது டோலிவுட்டிலும் அறிமுகமாகி பிஸியாகி விட்டார்.
ஆனால் பிரசன்னாவிற்கோ தயாரிப்பில் ஈடுபட வேண்டும் என்பது ஆசையாம். இதனால் சினேஹாவிடம் படம் தயாரிப்பது குறித்து பேசியுள்ளாராம். ஆனால் தற்போது தயாரிப்பாளர்கள் படும்பாட்டை பார்த்த சினேகா தயாரிப்பு எல்லாம் வேண்டாம் என்று கூறினாராம்.
இதனால் இருவருக்குள்ளும் முதல் முறையாக பிரச்சனை தலைதூக்கி உள்ளது என கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.