அஜீத்தின் ‘வலிமை’பட வில்லன் எஸ்.ஜே.சூர்யாவா?...அவரே சொன்ன பதில்...

By Muthurama Lingam  |  First Published Nov 22, 2019, 2:55 PM IST

இந்நிலையில் கடந்த சில தினங்களாகவே அஜீத்தின் வலிமை படத்தில் எஸ்.ஜே.சூர்யாதான் வில்லனாக நடிக்கிறார் என்ற செய்திகள் நடமாடிவருகின்றன. அது குறித்து இரு தரப்புமே அமைதி காத்து வந்த நிலையில் அண்மையில் தனது மவுனம் கலைத்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.


மிக விரைவில் துவங்கவிருக்கும் அஜீத்தின் ‘வலிமை’படம் குறித்து ஒரு டஜனுக்கும் மேலான வதந்திகள் நடமாடி வரும் நிலையில், அதில் ஒரு முக்கிய வதந்திக்குச் சொந்தக்காரரான இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா விளக்கம் அளித்திருக்கிறார்.

மான்ஸ்டர் படத்துக்குப் பின்னர் மீண்டும் நடிப்பில் பிசியாகிவிட்ட இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா தற்போது ராதாமோகன் இயக்கத்தில் ‘பொம்மை’படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் கடந்த சில தினங்களாகவே அஜீத்தின் வலிமை படத்தில் எஸ்.ஜே.சூர்யாதான் வில்லனாக நடிக்கிறார் என்ற செய்திகள் நடமாடிவருகின்றன. அது குறித்து இரு தரப்புமே அமைதி காத்து வந்த நிலையில் அண்மையில் தனது மவுனம் கலைத்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

Tap to resize

Latest Videos

அஜீத் படத்தில் நடிப்பது குறித்து நிருபர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்த அவர்,’அஜித் படத்தில் நான் நடிப்பதாக சொல்வதில் உண்மை இல்லை. நான் தல படத்தில் நடிக்கவில்லை. இதுவரை யாரும் என்னை தொடர்பும் கொள்ளவில்லை. இருந்தும் அஜித் கூப்பிட்டால் கண்டிப்பாக நான் அவருடன் நடிப்பேன். இதற்காக நல்ல கதைக்களம் அமையவேண்டும். அப்படி அமையும் பட்சத்தில் நாங்கள் இருவரும் கண்டிப்பாக சேர்ந்து நடிப்போம். நானும் அதற்கு ஆவலாக காத்துக்கொண்டிருக்கிறேன்''என்கிறார். அப்ப இனியாவது அஜீத்துக்கு வேற வில்லனைத் தேடுங்க பாஸ்.

click me!