எஸ்.ஜே.சூர்யா கூட நடிச்சது ஆம்பள எலியா இல்ல பொம்பள எலியா?: செம்ம டவுட்டில் கோடம்பாக்கம்.

Published : Jan 27, 2019, 06:36 PM IST
எஸ்.ஜே.சூர்யா கூட நடிச்சது ஆம்பள எலியா இல்ல பொம்பள எலியா?: செம்ம டவுட்டில் கோடம்பாக்கம்.

சுருக்கம்

*    ஜெயலலிதா தற்கொலை செய்து கொண்டிருப்பதாக ஸ்டாலின் கூறியுள்ளார். எனவே அவரையும் விசாரணை ஆணையத்திற்கு விசாரணைக்கு அழைக்க வேண்டும்!: வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன்.   

*   ஜெயலலிதா தற்கொலை செய்து கொண்டிருப்பதாக ஸ்டாலின் கூறியுள்ளார். எனவே அவரையும் விசாரணை ஆணையத்திற்கு விசாரணைக்கு அழைக்க வேண்டும்!: வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன். 
(சீக்கிரம் கூப்பிடுங்க சார் அவரை. நீங்க ஏதாச்சும் யோசனையில காலம் கடத்துனா, ஆணைய வாசல்ல ’விசாரணைக்கு கூப்பிடும் வரை வீரியமான போராட்டம்’ன்னு அறிவிச்சு, கொடிய தூக்கிட்டு வந்துட போறாரு.)

*   சென்னையில் நடந்தது புத்தக கண்காட்சியா இல்லை, ஜவுளிக்கடையான்னு தெரியலை. சம்பந்தமே இல்லாமல் ஊசி பாசி கடைக்கெல்லாம் இடம் கொடுத்திருந்தனர்!: புகார். 
(நல்லா கவனியுங்க, இந்த பஞ்சாயத்தை வெச்சே, அடுத்த புக் எக்ஸ்போவுக்கு ‘புத்தக கண்காட்சி நடத்துவது எப்படி?’ன்னு குறைஞ்சது நாற்பது பேராச்சும் புக்கு எழுதுறாங்களா இல்லையான்னு!)

*    மான்ஸ்டர் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கும், எலிக்கும் காம்பினேஷன் சீன்கள் இருக்கின்றன. இதுவரையில் இப்படியொரு கேரக்டரில்  எஸ்.ஜே.சூர்யாவை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள்!: டைரக்டர் நெல்சன் வெங்கடேசன். 


(காம்பினேஷன் காட்சியில எலிய பார்த்து ‘ஏய், ஆ! ஊ!’ன்னு எஸ்.ஜே.எஸ். விட்ட சவுண்டுல எலி பயந்து பதறி செத்துருக்குமே! 
அது கெடக்கட்டும் அவரு கூட நடிச்சது ஆண் எலியா இல்ல பெண் எலியா சார்?)

*   கம்யூனிஸ்ட்களை பற்றிய ஒவ்வொரு விமர்சனத்துக்கும் கம்யூனிஸ்டுகள் பதில் சொல்லிக் கொண்டு இருக்க வேண்டும் என்கிற அவசியமே கிடையாது! வரலாறு பதில் சொல்லும்!: டி.கே.ரங்கராஜன். 
(யாருப்பா சொன்னது....கம்யூனிஸ்ட்டுல பொதுவுடமைதான் உண்டு, சர்வாதிகாரமெல்லாம் கிடையாதுன்னு. அவன்லாம் வரிசையா வந்து டி.கே.ஆர்.ட்ட மன்னிப்பு கேளுங்க.)

*   தமிழகத்தில் நடக்கும் ஆவி ஆட்சியும், மத்தியில் நடக்கும் காவி ஆட்சியும் அகற்றப்பட வேண்டும். மத்தியில் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும்!: ஸ்டாலின். 
(மைக் கிடைச்சுதேன்னு ஆவி, காவின்னு நீங்க ரைமிங்கா பட்டைய கெளப்புறீங்களே திருநா. ஆனால், உங்களை ‘பாவி’ன்னு போட்டு வெளுக்குறாரே இளங்கோவன்.)

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நீதிபதி முன்பே அபாண்டமான பொய் புகார்!பாக்கியத்தின் நடிப்பால் அதிர்ச்சியில் பாண்டியன்-நீதிமன்றத்தில் வெடிக்கும் உண்மை!
அம்மா சென்டிமெண்ட வச்சு கொலை செய்ய சொன்னாங்க! உண்மையை உடைத்த ரௌடி: உறைந்து போன ஜனனி; எதிர்நீச்சல்..!