
தெலுங்கு சூப்பர் ஹீரோ ராம் சரண் கதா நாயகனாக நடிக்கும், மிகுந்த பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட பிரம்மாண்ட படமான “வினயை விதேயா ராமா” தமிழ், மலையாளம் மொழிகளில் வெளியாகிறது. பிரபல தெலுங்கு இயக்குனர் போயப்பட்டி சீனு இப்படத்தை இயக்கி உள்ளார். ‘பரத் என்னும் நான்’ என்ற படத்தில் நடித்து தெலுங்கு ரசிகர்களின் மனதை கவர்ந்த கியாரா அத்வானி கதாநாயகியாகவும் விவேக் ஓப்ராய் வில்லனாகவும் நடிக்கிறார்கள்.
மேலும் பிரசாந்த்,சினேகா, மதுமிதா,முகேஷ் ரிஷி,ஜெபி,ஹரீஷ் உத்தமன், ஆர்யன் ராஜேஷ், ரவி வர்மன் என்று பெரிய நட்சத்திர வரிசை மற்ற முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். குடும்ப பின்னணியில் காதல், கலகலப்பு, அரசியல்,செண்டிமெண்ட், வன்முறை, சாஹசம், என்று பொழுது போக்கு அம்சங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்த பிரம்மாண்ட படமாக “வினயை விதேயா ராமா” உருவாகியுள்ளது.
பொங்கலுக்கு வெளியான இந்த படம் பாக்ஸ் ஆபீசில் மண்ணைக்கவ்வியது. விமர்சன ரீதியாக பலதரப்பில் கழுவிக் கழுவி ஊற்றப்பட்ட இந்த படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்க ரிஷி பஞ்சாபி, ஆர்தர் A வில்சன் ஆகியோர் ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளனர். கனல் கண்ணன் சண்டை பயிற்சி அளித்துள்ளார்.
இப்படத்தின் பாடல் காட்சிகள் பிரம்மாண்ட அரங்குகளில் படமாக்கப்பட்டுள்ளது. 11 கோடி ரூபாய் செலவில் 100 நாட்கள் கிளைமாக்ஸ் சண்டை காட்சி மட்டும் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். டி VV என்டர்டைன்மெண்ட்ஸ் தயாரித்து பிரகாஷ் பிலிம்ஸ் வழங்கும் 'வினயை விதேயா ராமா' பிப்ரவரி முதல் வாரம் தமிழ்நாடு மற்றும் கேரளமெங்கும் வெளியாகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.