
இதற்கு முன் ஒரு தமிழ்ப்படத்திற்கு அதிகபட்சமாக 5 இசையமைப்பாளர்கள் இணைந்து இசையமைத்ததே அதிகபட்ச சாதனையாக இருந்த நிலையில் தனது ‘கசட தபற’ படத்துக்கு 6 இசையமைப்பாளர்களை அற்வித்து சாதனை படத்துள்ளார் இயக்குநர் சிம்புதேவன். இதற்கு முன் 1980ல் வெளிவந்த ‘கண்ணில் தெரியும் கதைகள்’ படத்துக்கு கே.வி.மகாதேவன், ஜீ.கே.வெங்கடேஷ், இளையராஜா, அகத்தியர், சங்கர் கணேஷ் ஆகிய 5 இசையமைப்பாளர்கள் இசையமைத்திருந்தனர்.
படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மற்றும் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தில் தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர்கள் 6 பேர் பணியாற்றியிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.அப்பட்டியலில் யுவன் ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், சாம்.சி.எஸ்., பிரேம்ஜி, ஷான் ரோல்டன் உள்ளிட்ட 6 பேரும் படக்குழுவில் இணைந்துள்ளனர்.
இதற்கான அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இயக்குநர் கங்கை அமரன்,...என் அன்புத்திருக் குழந்தைகள் இணந்து கலக்கும் சுத்தமான தமிழ்ப் படமான #கசடதபற திரைப்படத்தில் ஒன்றிணைந்து 6 இசையமைப்பாளர்களை அறிமுகப்படுத்துவதில் மகிழ்கிறேன் இந்தபடம் மிக வெற்றிபெறும் என்பதில் சந்தேகமே இல்லை என்று பதிவிட்டிருக்கிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.