இதுதான் உண்மை காரணம்! சபரிமலை குறித்து அதிரடி கருத்து தெரிவித்த நடிகர் சிவகுமார்!

By manimegalai aFirst Published Oct 20, 2018, 4:09 PM IST
Highlights

உச்ச நீதி மன்றம், சபரிமலை கோவிலுக்கு பெண்கள் செல்லலாம் என தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து, இதனால் கோவில்  நடை திறக்கப்பட்டவுடன் பெண்கள் பலர் ஐயப்பன் கோவிலுக்கு படை எடுக்க துவங்கியுள்ளனர்.

உச்ச நீதி மன்றம், சபரிமலை கோவிலுக்கு பெண்கள் செல்லலாம் என தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து, இதனால் கோவில்  நடை திறக்கப்பட்டவுடன் பெண்கள் பலர் ஐயப்பன் கோவிலுக்கு படை எடுக்க துவங்கியுள்ளனர்.

 ஆனால் காலம் காலமாக மதிக்கப்படும் மத நம்பிக்கையை தகர்க்கும் விதத்தில், பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்க மாட்டோம் என கேரள பக்தர்கள் மற்றும் தந்திரிகள் போராடி வருவதோடு... இப்படி உள்ளே வரும் பெண்களை அனுமதிக்க மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டு அவர்களை கோவில் உள்ளே நுழைய விடாமல் தடுத்து வெளியே அனுப்பினார்கள்.

இதனால் நீதிமன்ற தீர்ப்பின் படி, பெண்கள் சபரிமலைக்கு செல்லலாமா? செல்ல கூடாதா என்பது மிகப்பெரிய விவாதமாக உள்ளது.

மேலும் பல பிரபலங்கள் தொடர்ந்து இது குறித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்... இந்நிலையில் சபரிமலை விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் சிவகுமார்..."நூறு வருடங்களுக்கு முன்னர் வரை சபரிமலை தற்போது உள்ளதை விட மேலும் அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. சந்நிதானத்துக்கு செல்ல சரியான பாதை வசதி இல்லை. விலங்குகள் தாக்கும் அபாயம் அதிகமாயிருந்தது. 

எனவே ஆண்கள் மட்டும் கூட்டம் கூட்டமாக கோஷம் போட்டுக் கொண்டே சென்று வழிபட்டனர். பெண்களுடைய உதிர போக்கு மோப்ப சக்தி கொண்ட விலங்குகளை ஈர்க்கும் சக்தி கொண்டதால் அவர்களை . ஆண்கள் உடன் அழைத்து செல்வதில்லை. தற்போது காலம் நவீனமயமாகி விட்டது. பழைய காலத்து அச்சங்கள் இப்போது இல்லை. நீதிமன்றமும் அனுமதி வழங்கி விட்டது. இனியும் பெண்களை சந்நிதானத்துக்குள் வரவே கூடாது என்று தடுப்பது தவறு. விரத காலங்களை தவிர்த்து வேறு நாட்களில் பெண்களும் வந்து வழிபாடு செய்யுமாறு ஒரு ஏற்பாடும் உடன்பாடும் உருவாகவேண்டும்" என கூறியுள்ளார். 

click me!