
கொரோனா பீதி காரணமாக, அணைத்து பட வேலைகளும் முழுமையாக முடங்கி இருந்தாலும், ரசிகர்கள் அவ்வப்போது தங்களுக்கு பிடித்த நடிகர்கள் படங்களில் இருந்து, ஏதானும் புதிய அப்டேட், வெளியிடும் படி தொடர்ந்து கேட்டு வருகிறார்கள்.
ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று... சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடித்து வரும் ‘டாக்டர்’ படத்தில் இருந்து செல்லமா என்கிற பாடல், ஜூலை 16 ஆம் தேதி அன்று வெளியானது. இதனை ரசிகர்களுக்கு தெரிவிப்பதை கூட மிகவும் வித்தியாசமாகவே வீடியோ ஒன்றை வெளியிட்டு தெரிவித்திருந்தனர்.
சிவகார்த்திகேயன் தான் இந்த பாடலுக்கான வரிகளை எழுதி உள்ளார். 'இனிமேல் டிக் டாக் எல்லாம் Banமா.. நேரா டூயட் பாட வாயேன் மா..' என துவங்குகிறது இந்த பாடல். அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி ஆகிய இருவரும் தான் இணைந்து இந்த பாடலை பாடி உள்ளனர். இந்த பாடல் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்த நிலையில் பாடலின் மியூசிக் குறித்து வெளியான தகவல் ஒன்று வெளியானது.
அதாவது இந்த பாடல் சிம்புவின் கண்ணம்மா கண்ணம்மா பாடலை ஸ்லோ மோஷனில் கேட்பது போல் இருப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அதை வீடியோ மீம்ஸாக கிரியேட் செய்து சோசியல் மீடியாவில் சுத்தவிட்டுள்ளனர்.
இப்படி பல்வேறு விமர்சனங்கள் இந்த பாடலுக்கு வந்தாலும், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் இந்த பாடலுக்கு நல்ல விமர்சனங்களும் கிடைத்தது. இந்நிலையில் இந்த பாடலை பார்வையற்ற சிறுமி ஒருவர், கீ- போர்டில் வாசித்துள்ளார். இந்த வீடியோ வைரலாகியதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் கண்களில் பட அந்த சிறுமியின் திறமையை பாராட்டி சூப்பர் மா என பதிவிட்டுள்ளார். இவர் மட்டும் இல்ல, இந்த சிறுமியின் திறமைக்கு பல லைக்குகள் குவிந்து வருகிறது.
அந்த வீடியோ இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.