
இதற்கு முன்பு ரிலீஸான ஒன்றிரண்டு படங்கள் மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினி ஆக முயற்சி எடுத்து வந்த நடிகர் சிவகார்த்திகேயன் அந்த முயற்சியில் படுதோல்வ் அடைந்த நிலையில் தற்போது அடுத்த எம்ஜிஆர் ஆக முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் புதிய படத்தை ‘கடைக்குட்டி சிங்கம்‘ திரைப்படத்தை இயக்கிய பாண்டிராஜ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு ‘எங்க வீட்டு பிள்ளை’ என பெயர் வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். பாரதிராஜா, ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு, சூரி, சமுத்திரக்கனி, அனு இம்மானுவேல், நடராஜ், ஆர்.கே.சுரேஷ் என பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
‘எங்க வீட்டு பிள்ளை’ படத்தின் தலைப்பு உரிமை விஜயா புரொடக்ஷன் நிறுவனத்திடம் உள்ளது. இதன் காரணமாக ‘எங்க வீட்டு பிள்ளை’ தலைப்பை படத்துக்கு வைக்க அனுமதி கேட்டு படக்குழுவினர் விஜயா புரொடக்ஷன் நிறுவனத்தை அணுகியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் ராமச்சந்திர ரெட்டி மிக அண்மையில்தான் காலமானார் என்பதும் அவரது இறுதி சடங்குக்கு சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் யாருமே பங்கேற்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.