மாவீரன் படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், அப்படத்தின் FDFS பார்க்க வந்த நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ளது. தமிழகத்தில் அதிகாலை காட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், இப்படத்தின் முதல் காட்சி 9 மணிக்கு தான் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 9 மணிகாட்சி பார்க்க தியேட்டர் முன் குவிந்த ரசிகர்கள் மேள தாளங்கள் முழங்க ஆடிப்பாடி, கொண்டாடி வருகின்றனர். இதனால் திரையரங்குகள் திருவிழா கோலம் பூண்டுள்ளன.
மாவீரன் படத்தின் முதல் காட்சியை ரசிகர்களுடன் பார்ப்பதற்காக நடிகர் சிவகார்த்திகேயன் சென்னையில் உள்ள வெற்றி தியேட்டருக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் கார்டூனிஸ்டாக நடித்திருக்கிறார். அதன் அடிப்படையில், வித்தியாசமான கார்டூன் கதாபாத்திரங்கள் அடங்கிய ஷர்ட் அணிந்தபடி தியேட்டருக்கு வந்திருந்தார் சிவகார்த்திகேயன்.
மாவீரன் FDFS பார்க்க வந்த சிவகார்த்திகேயன் - உற்சாக வரவேற்பு அளித்த ரசிகர்கள் pic.twitter.com/hs9Fo3LVTF
— Asianetnews Tamil (@AsianetNewsTM)மாவீரன் படத்தை மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி உள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கரும், வில்லனாக மிஷ்கினும் நடித்துள்ளனர். மேலும் சரிதா, சுனில், யோகிபாபு, குக் வித் கோமாளி மோனிஷா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்து உள்ளார்.
இதையும் படியுங்கள்... மாமன்னனிடம் இருந்து வந்த மாவீரன் படத்தின் முதல் விமர்சனம்... என்ன உதயநிதி இப்படி சொல்லிட்டாரு?