
ஜிவி பிரகாஷ் நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான "திரிஷா இல்லனா நயன்தாரா" என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் ஆதிக் ரவிச்சந்திரன். அதைத் தொடர்ந்து 2017ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான "அன்பானவன் அசராதவன் அடங்காதவன்" திரைப்படத்தை இயக்கியதும் அவர் தான்.
அதன் பிறகு சுமார் 6 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு பிரபல நடிகர் பிரபுதேவா நடிப்பில் அண்மையில் வெளியான "பகீரா" என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்நிலையில் இவருடைய நான்காவது திரைப்படமாக உருவாகியுள்ளது "மார்க் ஆண்டனி". ஜிவி பிரகாஷ் இசையில் இந்த படம் உருவாகியுள்ளது, பிரபல நடிகர் விஷால் மற்றும் இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே சூர்யா ஆகிய இருவரும் இந்த திரைப்படத்தில் இரட்டை வேடம் ஏற்று நடித்துள்ளனர்.
காதல்... மோதல்... கொலை! பரத் - வாணி போஜன் நடித்துள்ள பக் பக் 'லவ்' ட்ரைலர் வெளியானது!
பிரபல இயக்குனரும் நடிகருமான செல்வராகவனும் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் பாடல் விரைவில் வெளியாகவுள்ளது. அந்த பாடலை தமிழ் மொழியில் மூத்த இயக்குனரும், நடிகருமான டி. ராஜேந்தர் பாடியுள்ளார்.
இந்நிலையில் இந்த பாடலின் தெலுங்கு வெர்சனை படத்தின் நாயகன் விஷால் அவர்களே பாடி உள்ளார். இது விஷால் பாடி இருக்கும் முதல் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தற்பொழுது வெளியிட்டுள்ள தனது ட்விட்டர் பதிவில் உண்மையில் பாடகர்கள் ஒரு பாடலை பாடி முடிப்பதற்குள் எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பதை இன்று தான் உணர்ந்துள்ளேன்.
ஒரு பாடகனாக அந்த உலகிற்குள் நுழைவதில் மகிழ்ச்சி அடைகின்றேன் என்று கூறி இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் அவர் உரையாடும் ஒரு நகைச்சுவையான காணொளியையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.