
தன்னை சிலர் மிரட்டுவதாக கூறி சிவகார்த்திகேயன், ரெமோ சக்சஸ் மீட்டில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் அழுது சர்ச்சையை கிளப்பினார்.
மேலும் புதுப்படத்திற்காக சிவாவிற்கு முன்பணம் கொடுத்ததாக எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மதன், வேந்தர் மூவிஸ் மதன், ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா ஆகியோர் புகார் தெரிவித்துள்ளனர்.
ஆனால் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திடம் இருந்து மட்டும் புதுப்படத்திற்கு முன்பணம் வாங்கியதாக தற்போது சிவகார்த்திகேயன் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார் என தயாரிப்பாளர்கள் கவுன்சிலின் பொதுச் செயலாளர் பி.எல். தேனப்பன் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த பிரச்சனையில் ஞானவேல்ராஜாவிடம் மட்டும் ஒப்பந்த நகல் உள்ளது என்றும் . மற்ற இருவரும் பணம் கொடுத்துவிட்டு 2 ஆண்டுகளாக காத்திருப்பதாக கூறுகிறார்கள்.
இந்நிலையில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திடம் இருந்து மட்டும் புதுப்படத்திற்கு முன்பணம் வாங்கியதாக சிவகார்த்திகேயன் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இந்த பிரச்சனைக்கு சுமூக தீர்வு காண சம்பந்தப்பட்டவர்களை நேரில் அழைத்து பேசப்படும் என டி. சிவா தெரிவித்துள்ளார் என்றார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.