'அயலான்' டேக் அப் ஆனதால் சிவகார்த்திகேயன் செம்ம ஹாப்பி பாஸ்!

By Vishnu PriyaFirst Published Feb 24, 2020, 6:52 PM IST
Highlights

*    சைக்கோ படத்தின் தோல்வி மிஷ்கின் மீது மிக மோசமான விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது. இந்த நிலையில் இப்போது விஷால் தயாரிப்பில் அவரை வைத்து ‘துப்பறிவாளன் 2’ இயக்கிக் கொண்டிருக்கிறார் மிஷ்கின். செலவு விவகாரத்தில் இருவருக்குள்ளும் ஏதோ பிரச்னையாம். இதனால் விஷாலே அப்படத்தின் மீதியை இயக்க முடிவெடுத்துள்ளதாக தகவல். 
 

*    சைக்கோ படத்தின் தோல்வி மிஷ்கின் மீது மிக மோசமான விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது. இந்த நிலையில் இப்போது விஷால் தயாரிப்பில் அவரை வைத்து ‘துப்பறிவாளன் 2’ இயக்கிக் கொண்டிருக்கிறார் மிஷ்கின். செலவு விவகாரத்தில் இருவருக்குள்ளும் ஏதோ பிரச்னையாம். இதனால் விஷாலே அப்படத்தின் மீதியை இயக்க முடிவெடுத்துள்ளதாக தகவல். 
(துப்பறிவாளன் 2 எடுக்கப்போயி கடைசியில சண்டக்கோழி 2 ஆகிடுமா விஷு)

*    பெரியா பெரியா படங்களே கூட சீக்கு வந்த கோழிகளாட்டமா கவிழ்ந்து, செம்ம நஷ்டத்தை தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் அள்ளிக் கொடுக்கின்றன. இந்த நேரத்தில், பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி வேறு ‘அந்த நிறுவனத்துட்ட கேமெராவை வாடகைக்கு எடுங்க. இவங்க கிட்ட லைட்ஸ் எடுங்க’ என்று ஆர்டர் போடுகிறாராம். நியாயவிலையில் நல்ல பொருள் கிடைக்க, அநியாய விலைக்கு இவர் ஆதரவு தெரிவிப்பது பெரும் பஞ்சாயத்து ஆகியிருக்கிறது. 
(ரோஜா மேடத்துக்கு ஒரு போன் போடுங்க பாஸு)

*    கமல்ஹாசன் கட்சி துவங்கி, விமர்சித்து பேசி ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வுக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கிறார். சிதார்த் வேறு தன் பங்குக்கு மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு எதிராக பஞ்சாயத்தை கூட்டிக் கொண்டிருக்கிறார். இவர்கள் இருவருமே இந்தியன் -2 படத்தில் இருப்பதால், அரசுகள் விட்ட சாபத்தால்தான் அப்படத்திற்கு நிறைய நெருக்கடி!என  புது சென்டிமெண்ட் கிளம்பியிருப்பதுதான் கோலிவிட்டின் லேட்டஸ் ஹிட்.
(இல்லாத எலிக்கு எட்டு லட்சம் ரூபாய்ல பொந்து கட்டுற கதை இதுதான்)

*    தனது வருங்காலத்தை நினைத்து ரொம்பவே பயந்து கிடந்தார் சிவகார்த்தி. தொடர் தோல்விகள். ஓரளவு கை கொடுத்த ‘நம்ம வீட்டு பிள்ளை’ படமும் அவரை  மட்டுமே ஹீரோவாக்கி எடுக்கப்பட்ட படமில்லை. இந்த நிலையில் தான் பெரிதும் எதிர்பார்க்கும் ‘அயலான்’ படம் பல சிக்கல்களில் சிக்கியதால் மேலும் அப்செட்டானார். ஆனால் இப்போது அப்படம் டேக் ஆப் ஆகியிருப்பதில் அண்ணன் கொஞ்சம் ஹேப்பி.
(இனிமே எல்லாம் இப்படித்தான் ஹாங்........)

*    2020ன் மிகப்பெரிய ஹிட்டாக எதிர்பார்க்கப்பட்டு, செம்ம நஷ்டத்தை தந்த படமாக அமைந்திருக்கிறதாம் தர்பார். நஷ்டப்பட்ட விநியோகஸ்தர்கள் ரஜினி மற்றும் ஏ.ஆர்.முருகதாஸை முற்றுகையிட்டனர். ரஜினி வழக்கம்போல் அல்வாவாக வழுக்கி, நழுவிவிட்டார். ஆனால் சிக்கிய முருகதாஸோ, ஒரு கட்டத்தில் விநியோகஸ்தர்களுக்கு எதிராக போலீஸில் புகாரே கொடுத்தார். ஆனால் இந்த சம்பவத்துக்கு பின் ‘மோசமான படத்தை எடுத்து, கொள்ளை விலைக்கு வித்தீங்க. நட்டப்பட்டவன் நியாயம் கேட்டா போலீஸுக்கு போறீங்களா. இனி நாங்க பார்த்துக்குறோம் உங்களை.’ என்று பாய்ந்ததாம் சில சினிமா சங்கங்கள். விளைவு, புகாரை வாபஸ் வாங்கிவிட்டார். 
(பேசாம இதையெல்லாம் சேர்த்து ஒரு படமாக்கிடுங்க முருகு)
 

click me!