பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சம் அல்ல...... கண்ணீருடன்  பேசிய சிவகார்த்திகேயன்.......!!!

 
Published : Oct 13, 2016, 03:21 AM ISTUpdated : Sep 19, 2018, 02:55 AM IST
பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சம் அல்ல...... கண்ணீருடன்  பேசிய சிவகார்த்திகேயன்.......!!!

சுருக்கம்

ரெமோ படம் வெற்றிபெற்றதை தொடர்ந்து, இந்த படத்தின் வெற்றி விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் இந்த படத்தை வெற்றி படம்மாக்கிய, மீடியாக்களுக்கு, பத்திரிகையாளர்களுக்கும், ரசிகர்கள் மற்றும் பொது மக்களுக்கும் தன் நன்றியை தெரிவித்தார்.

மேலும் இந்த படத்தில் நடித்த அனைவரும் நன்றாக நடித்துள்ளனர் , இன்னும் கொஞ்சம் கூட சிறப்பாக செய்திருக்கலாமே என்று சொல்லத் தோன்றும். ஆனால், அதைக்கூட சொல்ல முடியாத அளவுக்கு நிறைவாக செய்திருக்கிறார் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா என்று தயாரிப்பாளரை சிறப்பித்த சிவா.

 ஒரு படம் நடித்து முடித்தபிறகு அந்தப் படம் எப்போது வெளியாகும் என்று காத்திருக்கும் சூழல் மிகவும் கடினமானது என்றும்.

 ரஜினி முருகன் படம் வெளியாவதற்காக தாங்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. என்றும் எங்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, வெளிவரும் படங்களை தடுக்காதீர்கள். எங்களை வேலை செய்ய விடுங்கள். என கண்களில் கண்ணீர் தளும்ப பேசினார்.

உங்களைப் போன்ற சாதாரண இடத்தில் இருந்து வந்து தான் மேடை நானும் தற்போது  ஏறியிருக்கிறேன்.

 இதை தக்கவைக்க வேண்டும் என்றோ, அதைவிட பெரிய இடத்திற்கு போக வேண்டும் என்றோ நான் செயல்படவில்லை.

நானும் ராஜாவும் கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தி மக்களை மகிழ்விக்க போராடுகிறோம். என்றாவது ஒருநாள் அனைவரையும் மகிழ்விக்கும் ஒரு சிறந்த படத்தை கண்டிப்பாக இந்த டீம் கொடுக்கும்.

நான் எல்லா மேடையிலும் அழுகிறேன் என்று நினைக்க வேண்டாம். நான் உண்மையாக இருக்கிறேன் அவ்வளோதான் என கண்ணீர் மல்க தெரிவித்தார் சிவகார்த்திகேயன்.

ஒரு நாகயனாக உயர்த்து, மக்கள் மனதிலும் , ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்து விட்ட சிவகார்த்திகேயனை, யார் நினைத்தாலும் கீழே இறக்க முடியாது என்கிற நிலை இருந்தும், தன் படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்காக கண்ணீர் விட்ட சிவாகார்த்திகேயன் செயல் அனைவரையும் பதித்தித்தது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஜாடைமாடையாக பேசி வம்பிழுத்த அருணை அடிவெளுத்த முத்து - சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
1000 எபிசோடுகளை கடந்து வெற்றிநடைபோட்டு வரும் சீரியலை இழுத்து மூடும் சன் டிவி - அதிர்ச்சியில் ரசிகர்கள்