
’நட்புகள் கைதூக்கி உயர்ந்த, துரோகிகள் அவ்வப்போது முதுகில் குத்த அதன் வழியாக நான் நடந்து வரும் பயணம் தான் எனது சினிமாப் பயணம். அந்த வகையில் எனது முந்தைய படமான ‘மிஸ்டர் லோக்கல்’ துரோகிகளால்தான் தோற்றது’என்று படா பட்டாகப் பேசுகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.
’வேலைக்காரன்’படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயன், நயன்தாரா ஜோடி சேர்ந்து நடித்து வெளியான திரைப்படம் ‘மிஸ்டர். லோக்கல்’. எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவான இந்தத் திரைப்படத்தில் யோகி பாபு, ராதிகா, ரோபோ சங்கர், மொட்டை ராஜேந்திரன், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ் உள்ளிட்ட நடிகர் பட்டாளமே நடித்தது. அதிக எதிர்ப்பார்ப்புடன் வெளியான இந்தத் திரைப்படம் ரசிகர்களை ஏமாற்றியது. வசூலிலும், விமர்சனத்திலும் தோல்வியைத் தழுவியது மிஸ்டர் லோக்கல்.
இந்நிலையில் மிஸ்டர்.லோக்கல் திரைப்படம் குறித்து அப்படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயன் தற்போது கருத்து தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் நடைபெற்ற ’நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டின் போது பேசிய சிவகார்த்திகேயன், ’மிஸ்டர். லோக்கல்’ திரைப்படம் தோல்வி படம்தான் என்று தெரிவித்தார்.
அத்தோடு நிறுத்தாமல் தயாரிப்பாளரை லைட்டாக வம்பிழுத்த சிவகார்த்திகேயன் இப்படம் தயாரிப்பாளருக்கு லாபம் தந்ததா அல்லது நஷ்டம் அடைந்தாரா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் என் சினிமாப் பயணம் என்பது நட்புக்கு மத்தியில் அவ்வப்போது துரோகமும் கலந்ததுதான் என்று சூசகமாகப் பேசினார். இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா நடிகர் சூர்யாவின் உறவினர், பினாமி என்கிற நிலையில் சிவகார்த்திகேயனை ஒழித்துக்கட்டுவதற்காக ‘மிஸ்டர் லோக்கல்’ தயாரிக்கப்பட்டது என்பது படம் பூஜை போடப்பட்ட சமயத்திலிருந்தே நடமாடிவரும் செய்தி.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.