
நடிகர் தனுஷ், சாய் பல்லவி, வரலட்சுமி ஆகியோர் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த ஆண்டின் இறுதியில் வெளியானத் திரைப்படம் மாரி 2. யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த இப்படம் தோல்விப்படமாக அமைந்தது. ஆனாலும் படத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும் செம வரவேற்பை பெற்றன.
இப்படத்தில் மாரி கெத்து, ரௌடி பேபி, மாரியின் ஆனந்தி என மூன்று பாடல்கள் இடம்பெற்றிருந்தன. இதில் ரௌடி பேபி பாடலை தனுஷ் எழுதி, தீக்ஷிதா என்பவருடன் இணைந்து பாடியிருந்தார். இப்பாடலுக்கு நடன இயக்குநரும் நடிகருமான பிரபு தேவா நடனம் அமைத்திருந்தார். சாய் பல்லவியும் தனுஷும் ஆடியிருந்தனர்.
இப்பாடலின் வரிகளும், இசையும், பாடலுக்கேற்ற குரலும், சிறப்பான நடன அசைவுகளும், காட்சிகள் எடுக்கப்பட்ட விதமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இணையத்தில் வைரலான இந்தப் பாடல் பில்போர்ட் இசைப்பட்டியலில் இடம்பெற்று புதிய சாதனை படைத்தது.
மேலும் இந்தப் பாடல் வெளியான 16 நாட்களில் 100 மில்லியன் பார்வைகளையும் 41 நாட்களில் 200 மில்லியன் பார்வைகளையும், 69 நாட்களில் 300 மில்லியன் பார்வைகளையும், 104 நாட்களில் 400 மில்லியன் பார்வைகளையும் 157 நாட்களில் 500 மில்லியன் பார்வைகளையும் பெற்றுள்ளது. இதன் மூலம் தென்னிந்திய மொழிகளில் வெளியான பாடல்களிலேயே அதிக பார்வைகளைப் ரவுடி பேபி பாடல்.பெற்றுள்ளது
இதற்கு முன் இணையத்தில் அதிக பார்வைகளைப் பெற்ற பாடலாக 3 படத்தில் வரும் ஒய் திஸ் கொலவெறி பாடல் இருந்து வந்தது..
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.