கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்..! SK 21 படம் பூஜையுடன் துவங்கியது.. வைரலாகும் வீடியோ!

By manimegalai a  |  First Published May 5, 2023, 12:15 PM IST

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ் கே 21 படத்தின் படப்பிடிப்பு, பூஜையுடன் துவங்கியுள்ளது. இது குறித்த வீடியோவை, ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தன்னுடைய அதிகார பூர்வ twitter பக்கத்தில் வெளியிட, ரசிகர்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 


நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது, தன்னுடைய முதல் படத்திலேயே தேசிய விருதை வென்ற மண்டேலா படத்தின் இயக்குனர், மடோன் அஸ்வின் இயக்கத்தில் 'மாவீரன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தீவிரமாக ஒரு புறம் நடந்து வரும் நிலையில், தன்னுடைய அடுத்த படத்திற்காக தயாராகிவிட்டார் சிவகார்த்திகேயன். 'மாவீரன்' படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள், அதிதி சங்கர் நினைக்கிறார். மேலும் யோகி பாபு, சுனில், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

Tap to resize

Latest Videos

The Kerala Story Review: கேரள ஸ்டோரி மதவெறியை தூண்டும் சர்ச்சை படமா? ட்விட்டர் விமர்சனம்!

'மாவீரன்' படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தன்னுடைய 21 வது படத்தை உலக நாயகன் கமலஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்க உள்ளதாகவும், ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாக்கின. இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

'லால் சலாம்' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு எங்கே? புகைப்படத்துடன் மாஸ் அப்டேட் கொடுத்த விஷ்ணு விஷால்!

ராஜ்கமல் பிலிம்ஸின் 51 வது படமாக உருவாகும், இப்படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிக்க உள்ளாராம்... எனவே இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக அடுத்தது செய்திகள் வெளியாகி வந்த நிலையில், தற்போது SK 21 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளதை, ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் ஆகி வருவதோடு, சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும், வாழ்த்துக்களையும் குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

The Journey begins … pic.twitter.com/myiW77GRcR

— Raaj Kamal Films International (@RKFI)

 

click me!