திருச்சி சிவா, சசிகலா புஷ்பா கதை படமாகிறது..... படம் பெயர் என்ன தெரியுமா?

First Published Feb 10, 2018, 3:01 PM IST
Highlights
siva manasula pushpa is real story


சிவா மனசுல சக்தி

'சிவா மனசுல புஷ்பா' என்ன இந்த பெயரை எங்கோ கேட்டது போல இருக்கிறதா. ஆம் சில வருடங்களுக்கு முன் ஜீவா நடிப்பில் வெளியான படம் சிவா மனசுல சக்தி. இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

தழுவல்

இந்த நிலையில் இந்த படத்தின் பெயரை தழுவி ஒரு புதிய படம் உருவாகிறது. படத்திற்கு சிவா மனசுல புஷ்பா என்று பெயரிடப்பட்டுள்ளது.

சர்ச்சை

இந்த படத்தில் கதாநாயகனாக புதுமுக நடிகர் வாராஹி நடிக்கிறார்.
ஸ்ரீ வாராஹி அம்மன் பிலிம்ஸ் சார்பில் வாராஹியே இப்படத்தை தயாரிக்கிறார்.
அவருடன் புதுமுகங்கள் ஷிவானி, சுதா, நதியா ஸ்ரீ,தவசிராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பல தொலைக்காட்சி தொடர்களை இயக்கிய அருந்தவராஜா திரைக்கதை எழுதி இயக்குகிறார். குறிப்பாக இந்த படத்தின் போஸ்டரை பார்க்கும் போதே பாராளுமன்றம் காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் இந்த படம் சர்ச்சைகுரிய படமாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.

கதையல்ல நிஜம்

சிவா மனசுல புஷ்பா படம் குறித்து படத்தின் ஹீரோ மற்றும் தயாரிப்பாளர் வாராஹி கூறும் போது இந்த கதை கற்பனை அல்ல நிஜத்தில் நடந்த சர்ச்சைக்குரிய நிகழ்வுகளின் தொகுப்பு.நிஜத்தில் நடந்தவை.ஒருவருக்கொருவர் எதிர்  துருவங்களாக இருக்கும் மக்கள் பிரதிநிதிகளின் தனிப்பட்ட வாழ்க்கை ரகசியங்கள் இந்த கதையில் இடம்பெறுகிறது. 

அரசியல் புள்ளிகள்

படம் வெளியாகும் போது தமிழக அரசியலிலும்,  மக்கள் மத்தியிலும் பல அதிர்வலைகளை ஏற்படுத்தும்.
அது சரி படத்தின் தலைப்பை பார்த்தால் உங்களுக்கு புரிகிறதா இல்லையா சிவா, புஷ்பா இந்த பெயர்கள் எதையாவது நினைவுபடுத்துகிறதா.ஆம் நீங்கள் நினைத்தது சரிதான், திருச்சி எம்.பி சிவா அதிமுக எம்.பி சசிகலா புஷ்பா இருவருக்கும் இடையில் இருந்த  உறவு பற்றிய  கதைதான் இது.

பலான காட்சிகள்

டெல்லி ஏர்போர்ட்டில் திருச்சி சிவாவை சசிகலா புஷ்பா கன்னத்தில் அறைந்த காட்சி படத்தில் இடம்பெற்றுள்ளதாம். இதுமட்டுமல்லாமல் திருச்சி சிவா மற்றும் சசிகலா புஷ்பா தொடர்பான பல பல பலான காட்சிகளும் இடம்பெற்றிருக்கிறதாம்.

சென்சார்

இதன் காரணமாக சம்மந்தப்பட்டவர்கள் படத்திற்கு தடை கோர வாய்ப்புள்ளது என்பதால், சென்சார் போர்டில் முக்கிய பொறுப்பு வகிக்கும் காமெடி நடிகர் ஒருவர் வாராஹியை அழைத்து படத்துக்கு சென்சாரில் சிக்கல் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று சில வழிகளை சொல்லி கொடுத்திருக்கிறாராம்.

படத்தின் போஸ்டரை பார்க்கும் போது பலான படம் போன்று தோன்றுவதால் பலத்த எதிர்ப்பு கிளம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

click me!