
நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் தல அஜீத் குறித்து மறைமுகத் தாக்குதல் ஒன்றை நடத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் அவ்வப்போது மட்டும் தமிழ்ப்படங்களில் நடிக்கும் சித்தார்த்.
தெலுங்கு, இந்திப்படங்களில் கூடுதல் கவனம் செலுத்திக்கொண்டு அவ்வப்போது தமிழ்ப்படங்களில் தலைகாட்டும் நடிகர் சித்தார்த் தற்போது சசியின் இயக்கத்தில் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.இந்நிலையில் இம்மாதம் 19ம் தேதி ரிலீஸாகவுள்ள ‘த லயன் கிங்’படத்துக்கு டப்பின் பேசியுள்ள சித்தார்த் நேற்று அப்பட புரமோஷனுக்காக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார். இதில் அவருடன் நடிகர்கள் அரவிந்தசாமி, ரோபோ சங்கர்,சிங்கம்புலி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இச்சந்திப்பின் கேள்வி பதில் நிகழ்ச்சியில் ஒரு நிருபர் ஆங்கிலப்படப் புரமோஷனுக்குக் காட்டும் ஆர்வத்தை உங்களை நம்பிப் பலகோடிகள் முதலீடு செய்யும் தமிழ்ப்படங்கள் மீது காட்டுவதில்லையே என்றவுடன் கோபத்தின் உச்சத்துக்குப் போன சித்தார்த்,’நான் வேல செய்யும் அத்தனை பட புரமோஷன்களுக்கும் சின்சியராக சென்று கொண்டுதான் இருக்கிறேன். இங்கே என்னுடன் இருக்கும் சக நடிகர்களும் அப்படிப்பட்டவர்கள். ஆனால் இந்தக் கேள்வியை யாரிடம் கேட்கவேண்டும் என்று தெரிந்திருந்தும் அவரிடம் மட்டும் கேட்காமலே இருக்கிறீர்கள்’என்று அஜீத்தை நேரடியாகத் தாக்கிப்பேசினார். கடந்த பல ஆண்டுகளாகவே என் பட புரமோஷனுக்குக் கூட நான் போகமாட்டேன்’என்று அடம்பிடித்துக்கொண்டிருப்பவர் அஜீத் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.