Suchitra : போதைக்கு அடிமையான தமிழ் நடிகர்கள்.. பல உண்மைகளை போட்டு உடைத்த சுசித்ரா

Published : Jun 25, 2025, 12:41 PM ISTUpdated : Jun 25, 2025, 12:42 PM IST
suchitra about srikanth case

சுருக்கம்

நடிகர் ஸ்ரீகாந்த் கைது குறித்தும், தமிழ் திரையுலகில் போதைப்பொருள் பயன்படுத்துவது குறித்தும் பின்னணிப் பாடகி சுசித்ரா அளித்திருக்கும் பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Suchithra About Drug Usage in Cine Industry

சில நாட்களுக்கு முன்பு நுங்கம்பாக்கம் மதுபான விடுதியில் அதிமுக முன்னாள் பிரமுகர் பிரசாத் என்பவர் அடிதடியில் ஈடுபட்டுள்ளார். அவரை கைது செய்து போலீசார் விசாரணை செய்த போது, வெளிநாடுகளில் இருந்து கொக்கைன் உள்ளிட்ட போதைப் பொருட்களை இறக்குமதி செய்து அதை ஸ்ரீகாந்த் உள்ளிட்ட சில நடிகர்களுக்கு விநியோகித்த ஆதாரங்கள் கிடைத்தது. இதையடுத்து ஸ்ரீகாந்தை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவருக்கு ரத்த பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் அவர் போதைப் பொருள் பயன்படுத்தி இருப்பது உறுதியான நிலையில், கைது செய்யப்பட்டது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தமிழ் திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

போதை வழக்கில் சிக்கிய ஸ்ரீகாந்த்

இந்த நிலையில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் தான் தவறு செய்து விட்டதாகவும், உடல்நிலை சரியில்லாத மகனை கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும், எனவே ஜாமின் வழங்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் நீதிபதி ஸ்ரீகாந்துக்கு ஜாமின் வழங்க மறுத்தத்துடன், ஜூலை 7 வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து புழல் சிறையில் ஸ்ரீகாந்த் அடைக்கப்பட்டார். இதுகுறித்து ஸ்ரீகாந்திடம் நடத்தப்பட்ட விசாரணையில், பிரசாந்த் தயாரித்த படம் ஒன்றில் நடித்ததற்காக ரூ.10 லட்சம் சம்பள பாக்கி இருந்ததாகவும், அதைக் கேட்டபோது அவர் கொக்கைனை கொடுத்ததாகவும், சில முறை பயன்படுத்திய பின்னர் அதற்கு அடிமையாகிப் போனதாகவும், பின்னர் தானே அதைக் கேட்டு வாங்கி பயன்படுத்தத் தொடங்கினேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஸ்ரீகாந்துக்கு முளைத்த திடீர் ரசிகர்கள்

ஸ்ரீகாந்த் மட்டுமின்றி ‘கழுகு’ பட நடிகர் கிருஷ்ணாவும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அவரைத் தேடி காவல்துறையினர் கேரளாவிற்கு விரைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இவர்கள் மட்டுமல்லாமல் திரைத்துறையில் பல முக்கிய தலைகள் சிக்கலாம் என்கிற பேச்சு எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள பாடகி சுசித்ரா பல தகவல்களை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர், “ஸ்ரீகாந்த்துக்கு இப்போது திடீர் ரசிகர்கள் முளைத்திருக்கிறார்கள். அவர் இத்தனை வருடங்களாக திரைத்துறையில் வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருந்தபோது இவர்கள் எங்கே போயிருந்தார்கள்? குழந்தையை கவனிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் ஸ்ரீகாந்த் அழுகிறார். ஆனால் கொக்கைன் அடிக்கும் பொழுது மகன் நினைப்பு வரவில்லையா? தமிழ் திரையுலகில் பலர் இந்த கொக்கைன் போதைப் பொருளை பயன்படுத்துகிறார்கள்.

மும்பை நடிகர்களே காரணம்

திரைத்துறையை பொறுத்தவரை போதைப் பொருட்களை பயன்படுத்தும் எவரும் ரத்த பரிசோதனை செய்ய அனுமதிக்க மாட்டார்கள். ஷாருக்கானின் மகனுக்கு கூட ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதா? என்பது தெரியவில்லை. மும்பை போன்ற இடங்களில் இருந்து சில கௌரவ வேடங்கள், ஐட்டம் பாடல்களுக்கு நடிக்க வரும் நடிகர்கள் போதைப் பொருள் கலாச்சாரத்தை தமிழ் திரைத்துறைக்குள் புகுத்திவிட்டனர். மும்பையில் எல்லாம் காலையில் பல் விளக்குவது போல நாங்கள் இதை பயன்படுத்துவோம் என்று சொல்லி அவர்கள் இந்த கலாச்சாரத்தை திரைத்துறைக்குள் புகுத்திவிட்டனர். மும்பையில் இருந்து வரும் நடிகர்கள் வெறும் நடிப்பதற்காக மட்டும் இங்கு வருவதில்லை. அங்கிருந்து வரும் நடிகர்கள் இங்கு எதை வேண்டுமானாலும் செய்துவிட்டு மும்பைக்கு திரும்பி விடுகிறார்கள். அவர்களைப் பற்றி இங்கு யாருமே பேசுவது கிடையாது.

ஒரு கிராம் கொக்கைன் ரூ.65,000

இதையெல்லாம் நான் ஆதாரங்கள் இல்லாமல் பேசுவதில்லை. நான் ஊடகத்துறையில் பணியாற்றிய போது இது குறித்து செய்திகள் வரும். ஆனால் இதையெல்லாம் வெளியிட முடியாத சூழல் இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் யூடியூப், சமூக வலைதளங்கள் இருப்பதால் ஸ்ரீகாந்த் செய்திகள் வேகமாகப் பரவுகின்றன. ஸ்ரீகாந்த் செய்தியை பல தொலைக்காட்சிகள் பரிதாப மியூசிக் உடன் இணைத்து செய்தியாக வெளியிடுகின்றனர். திரைத்துறையில் இருக்கும் அனைவரையும் இது போல் நாம் குற்றச்சாட்டி விட முடியுமா என்று கேட்டால் அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று தான் நம்மால் கூற முடியும். எனக்கும் கொக்கைன் பயன்படுத்துவதற்கு அருகில் வரை வாய்ப்புகள் வந்தது, ஆனால் நான் வேண்டாம் என்று மறுத்துவிட்டேன். கலப்பட கொக்கைன் ஒரு கிராம் ரூ.12,000-க்கும், ஒரிஜினல் கொக்கைன் ரூ.65,000 வரை விற்பனையாகிறது.

நடிகர்களின் மனைவிகளே உடந்தை

சென்னையில் உள்ள அனைத்து மதுபான விடுதிகள், பப்களில் இது சாதாரணமாக நடக்கிறது. சென்னையில் இருக்கும் மதுபான விடுதிகளில் கழிவறைக்குச் சென்று பலரும் போதை பொருட்களை பயன்படுத்துகின்றனர். 1 கிராம் கொக்கைன் பயன்படுத்த ஒரு 30 வினாடிகள் போதும். ‘கங்குவா’ படத்தில் கூட ஒரு காட்சியில் சூர்யா அதை சித்தரித்திருப்பார். அந்த காலத்தில் இருந்த நடிகைகள் குடிப்பழக்கத்தில் இருந்த தங்களது கணவர்களை மீட்டு எடுத்ததை பார்த்திருப்போம் ஆனால் இந்த காலத்தில் நடிகர்கள் மனைவிகளே ஊற்றிக் கொடுப்பதும் பார்ட்டிகளில் கலந்து கொள்வதும் வெள்ளி தட்டுகளில் போதைப்பொருட்களை வைத்து கோலம் வரைந்து கொண்டு வருவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

தோற்றத்தை வைத்தே சொல்லலாம்

நீங்கள் கூகுளில் சென்று கொக்கைன் பயன்படுத்துவதன் பக்க விளைவுகளை தேடிப் பாருங்கள். அந்தப் பக்க விளைவுகளுடன் எந்த நடிகர்களின் தோற்றம் ஒத்துப் போகிறதோ அவர்கள் எல்லாருமே கொக்கைன் பயன்படுத்துகிறார்கள். இதுவரை தான் என்னால் சொல்ல முடியும். இதற்கு மேல் அவர்களின் பெயர்களை எல்லாம் என்னால் சொல்ல முடியாது என்று சுசித்ரா கூறினார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

டபுள் எவிக்‌ஷன்... பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் காலியாகப்போகும் 2 விக்கெட் யார்?
தமிழகம் அயோத்தியாக மாற வேண்டும் என்பதே பாஜக விருப்பம்..! இயக்குநர் பா.ரஞ்சித் குற்றச்சாட்டு!