lata mangeshkar passed away : கானக் குயில் மறைந்தது.... பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார்

Ganesh A   | Asianet News
Published : Feb 06, 2022, 10:00 AM ISTUpdated : Feb 06, 2022, 10:11 AM IST
lata mangeshkar passed away : கானக் குயில் மறைந்தது.... பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார்

சுருக்கம்

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் உடல் நிலை மோசமடைந்து மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானார். அவருக்கு வயது 92    

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் உடல் நிலை மோசமடைந்து மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானார். அவருக்கு வயது 92  

லதா மங்கேஷ்கர் 1929 ஆம் ஆண்டு மராத்தி மற்றும் கொங்கனி இசைக்கலைஞரான தீனநாத் மங்கேஷ்கர் மற்றும் அவரது மனைவி ஷெவந்தி ஆகியோரின் மூத்த மகளாக இந்தூரில் பிறந்தார். லதா பிறந்தபோது "ஹேமா" என்று பெயர் சூட்டப்பட்டது. அவரது தந்தையின் நாடகங்களில் ஒன்றான பாவ்பந்தனில் லத்திகா என்ற பெண் கதாபாத்திரத்திற்குப் பிறகு அவரது பெற்றோர்கள் அவருக்கு லதா என்று பெயரிட்டனர் .

லதா குடும்பத்தின் மூத்த பிள்ளை. மீனா , ஆஷா , உஷா , மற்றும் ஹிருதய்நாத் ஆகியோர் அவரது உடன்பிறந்தவர்கள்; அனைவரும் திறமையான பாடகர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள். லதா தனது முதல் இசைப் பாடத்தை தந்தையிடம் இருந்து பெற்றார். ஐந்து வயதில், அவர் தனது தந்தையின்  மராத்தியில் சங்கீத இசை நாடகங்களில் நடிகையாக பணியாற்றத் தொடங்கினார்.

சுமார் இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியுள்ள லதா மங்கேஷ்கர், இந்திய ரசிகர்களால் “கானக்க் குயில்” எனவும் போற்றப்படுகிறார். இந்தியாவின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா விருது”, “பத்ம பூஷன் விருது”, “பத்ம விபூஷன்” விருதுகளைப் பெற்றது மட்டுமல்லாமல், தேசிய விருது, தாதாசாகேப் பால்கே விருது, நான்கு முறைக்கு மேல் ஃபிலிம்பேர் விருதுகள் என மேலும் பல விருதுகளைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார். 
தன்னுடைய நான்கு வயதிலேயெ படத்தொடங்கி, கிட்டத்தட்ட 65 ஆண்டுகளைக் கடந்து, சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இந்திய திரையுலகில், மிகச்சிறந்த பின்னணிப் பாடகியாக புகழ் பெற்று விளங்கினார். அண்மையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்ட லதா மங்கேஷ்கருக்கு, பின்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அங்கம்மாள் திரைப்படம் சூப்பரா? சுமாரா? விமர்சனம் இதோ
அடிபொலியாக இருந்ததா குற்றம் புரிந்தவன் வெப் சீரிஸ்...? முழு விமர்சனம் இதோ