
தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மற்றொரு புறம் ரசிகர்களை குஷி படுத்தும் வகையில் அடிக்கடி ஏதேனும் தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கிறது.
அந்த வகையில், பிகில் படத்தில் இடம்பெற்றுள்ள 'சிங்கப்பெண்ணே' லிரிக்கல் பாடல், ஜூலை 23 ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வெளியாகி படக்குழுவை அதிர்ச்சியாக்கியது.
குறிப்பாக, படம் குறித்த எந்த தகவலும் வெளியாகிவிட கூடாது என்று, ஒவ்வொரு அசைவிலும் மிகவும் கவனமாக இருந்து வரும், இயக்குனர் அட்லீ மற்றும் படத்தின் தயாரிப்பாளருக்கும் இது பேரதிர்ச்சியாக இருந்தது.
எனினும், சிங்கப்பெண்ணே பாடல் ரிலீஸ், விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இந்த பாடலின் ரிலீஸ் தேதியை புதிய போஸ்டருடன் வெளியிட்டுள்ள படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, இந்த பாடல் நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு மகளுக்கும் அர்பணிக்கப்பட்டது என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
இந்த பாடல் வெளியானதும் எப்படி வைரலாக்கலாம் என்கிற முயற்சியில் தற்போது இறங்கியுள்ளனர் ரசிகர்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.