
அஜித்தை வைத்து ‘மங்காத்தா' என்ற சூப்பர் ஹிட்டைத் தந்த வெங்கட்பிரபு மீது யார் கண்பட்டதோ, 'பிரியாணி', 'மாசு' என அடுத்தடுத்து சறுக்கினார். அதன்பிறகு தமிழ் சினிமா விதிப்படி வெங்கட்பிரபுவை யாருமே கண்டுகொள்ளவில்லை.
அப்படி ஒரு நேரத்தில், ட்விட்டர் அரட்டையில் சிம்பு வெங்கட்பிரபுவிடம் 'பில்லா3'யை நாம சேர்ந்து பண்ணுவோமா?’ என எதார்த்தமாக கேட்க, அவரும் பதார்த்தமாக 'அதுக்கென்ன பண்ணிட்டாப்போச்சு' என வாக்கு கொடுத்தார். உடனே வழக்கம்போல் மீடியாவில் செய்திகள் பரபரத்தது.
ஆனால், பரபரத்து என்ன பிரயோஜனம்? இருவரையும் நம்பி இல்லை இல்லை சிம்புவை நம்பி எந்த தயாரிப்பாளரும் முன்வரவில்லை.
பொறுத்துப்பார்த்த வெங்கட்பிரபு, ‘சென்னை 28-2’ படத்தைத் தொடங்கி, குறுகிய பட்ஜெட்டில் குறுகிய காலத்தில் எடுத்து ஹிட்டும் கொடுத்து தற்போது மீண்டிருக்கிறார்.
இந்நிலையில், வெங்கட்பிரபு அடுத்து, கொடுத்த தனது வாக்குக்காக சிம்புவின் அட்ராசிட்டியை சகித்துக்கொண்டு அவருடன் இணைவாரா? அப்படியே இணைந்தாலும் சிம்புவை சகித்துக்கொண்டு தயாரிக்க ஒரு தயாரிப்பாளர் முன்வருவாரா?
இல்லை, எதுக்குடா வம்பு என சிம்புவை வெங்கட்பிரபு டீலில் விட்டுவிட்டு வேறு வேலையை பார்க்கப்போய்விடுவாரா? என பல்வேறு கேள்விகள்அலையடித்துக்கொண்டிருக்கிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.