தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் செய்யாததை முதல்முறையாக செய்யப்போகும் சிம்பு!! இது வேற லெவல் பிளான்....

Published : May 20, 2019, 12:47 PM ISTUpdated : May 20, 2019, 12:48 PM IST
தமிழ் சினிமாவில் இதுவரை யாரும்  செய்யாததை முதல்முறையாக செய்யப்போகும் சிம்பு!! இது வேற லெவல் பிளான்....

சுருக்கம்

தமிழ் சினிமாவே சக நடிகர்கள் வாய் பிளக்க வைக்கும் அளவிற்கு தானே, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் தயாரிப்பு, பாடல் இசை, நடனம் என தாறுமாறாக பன்னவுள்ளாராம். அதுமட்டுமல்ல தான் அறிமுகப்படுத்திய சந்தனத்தையும் இந்த ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளவுள்ளாராம். 

மன்மதன் என்ற படத்தை முருகன் என்ற இயக்குனரை வைத்து எடுத்த பின் அந்த படத்தை போட்டு பார்த்த டி.ஆர் குடும்பத்தினர் அந்த இயக்குனர் முகனிடம் ரூடாக பேசி படத்தில் கதை, திரைக்கதை, வசனம் என் பையன் சிம்பு பேர்தான் போட வேண்டும் என வற்புருத்தி பின் அப்படியே நடந்ததாம்.

மன்மதன் படம் மெகா ஹிட்டுக்குப் பின், அந்த படத்தை நான் தான் எடுத்தேன் என ஒரு தயாரிப்பாளரைப் பிடித்து, வல்லவன் என்ற படத்தை எடுத்தார் சிம்பு, படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. சிம்பு, நயன்தாரா காதலும் அப்படத்தில் தான் ஆரம்பித்தது. அதன்பிறகு நடிப்பில் பிசியாக இருந்த சிம்பு இயக்குவதை தவிர்த்து வந்தார்.

இந்நிலையில், தற்போது  வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தில் நடிக்கவுள்ளார். அந்தப்படத்திற்கு பிறகு கன்னட ரீமேக்கான மப்டி படத்தின் ரீமேக்கில் கௌதம் கார்த்திக் உடன் இணைந்து நடிக்க இருக்கிறார்.

2006 ஆம் ஆண்டிற்கு பிறகு 14 வருடங்கள் கழித்து மீண்டும் படம் இயக்கும் எண்ணம் சிம்புவிற்கு வந்திருக்கிறது. தமிழ் சினிமாவில் யாரும் தொடாத கதைக்களத்தை கையில் எடுக்க முடிவு செய்திருக்கிறார் சிம்பு. தமிழ் சினிமாவே சக நடிகர்கள் வாய் பிளக்க வைக்கும் அளவிற்கு தானே, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் தயாரிப்பு, பாடல் இசை, நடனம் என தாறுமாறாக பன்னவுள்ளாராம். அதுமட்டுமல்ல தான் அறிமுகப்படுத்திய சந்தனத்தையும் இந்த ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளவுள்ளாராம். 

பிளான் பக்காவாக தயார் நிலையில் வைத்திருக்கும் சிம்பு மாநாடு , மப்டி படத்திற்கு பிறகு இப்படத்தை 2020 ல் இயக்க உள்ளாராம். மாநாடு , மப்டி படத்தின் படப்பிடிப்புகளை முடித்த பிறகு தான் அடுத்த வேலையில் களம் இறங்குவது என உறுதியாக இருக்கிறாராம் சிம்பு. அடுத்த ஆண்டு இப்படம் குறித்த  அறிவிப்புகள் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பெரிய ஐஸ்வர்யா ராய்னு நெனப்பு... பேபினு சொன்ன வாயை உடைச்சிருவேன் - பாரு உடன் சண்டைபோட்ட கம்ருதீன்
ஷாருக்கானுக்கு இப்படி ஒரு விசித்திரமான பழக்கம் இருக்கிறதா? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே..!