
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன்-2 படப்பிடிப்பு, சென்னை பூந்தமல்லியில் உள்ள 'இவிபி' பிலிம் சிட்டியில் கடந்த வாரம் நடந்த போது, கிரேன் சரிந்து விழுந்ததில், சந்திரன், கிருஷ்ணன், மது ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் 9 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து திரையுலகினர் மத்தியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்திய நிலையில், பலரும் தொடர்ந்து தங்களுடைய இரங்கலை தெரிவித்ததோடு, இனி இது போல் ஒரு விபத்து நடைபெற கூடாது என கூறி தங்களுடைய கருத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.
மேலும் நடிகர் கமலஹாசன், லைக்கா நிறுவனத்திற்கு எழுதிய கடிதத்தில், கதாநாயகன் முதல் கடை நிலை ஊழியர்கள் வரை அனைவருக்கும் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்றும், இனி இது போன்ற விபத்து ஏற்பட்டால், அதன் முழு பொறுப்பையும் தயாரிப்பு நிறுவனம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என கூறியிருந்தார்.
மேலும் செய்திகள்: மாடலிங் துறையில் சிறகடித்த டிரம்ப் மகள் இவாங்கா! புகைப்பட தொகுப்பு!
இதுகுறித்த பேச்சுகள் ஒருபுறம் போய் கொண்டிருக்க, சிம்புவின் 'மாநாடு' படத்தை தயாரிக்கும் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, தான் தயாரிக்க உள்ள 'மாநாடு' படத்தில் பணியாற்றும் அணைத்து ஊழியர்களுக்கும் ரூ.8 லட்சம் செலவில் இன்சூரன்ஸ் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இவரின் இந்த செயல் அந்த படத்தில் பணியாற்றும் அனைவருக்குமான பாதுகாப்பை உறுதி செய்துள்ளதால், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் இந்த செயலை கோலிவுட் திரையுலகை சேர்ந்த பலரும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.