'நிலம் பூத்து மலர்ந்த நாள்' தமிழ் மொழிபெயர்ப்பு நூலுக்கு 'சாகித்ய அகாடமி விருது'! இதன் சிறப்பு என்ன தெரியுமா?

By manimegalai aFirst Published Feb 25, 2020, 12:59 PM IST
Highlights

எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான, 'சாகித்ய அகாடமி விருது' தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த வருடத்திற்கான விருது, மலையாள நூலை, தமிழில் 'நிலம் பூத்து மலர்ந்த நாள்' என்கிற மொழிபெயர்ப்பு நூலுக்காக கே.வி.ஜெயஸ்ரீ என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 
 
'நிலம் பூத்து மலர்ந்த நாள்' நூல் மொழிபெயர்க்கப்பட்ட மூல நூலில் கருத்தை சற்றும் சுவாரஸ்யம் குறையாமல் கே.வி.ஜெயஸ்ரீ கூறி இருப்பதால் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக இந்த நூலில், 2000 ஆண்டுகளுக்கு முந்தய சங்க இலக்கிய வாழ்க்கை முறையை பற்றியும், தமிழ் மொழிக்கு உயர்ந்த நாவலாகவும்  மொழி பெயர்க்கப்பட்டுள்ளதால் இந்த வருடத்திற்கான சாகித்ய அகாடமி விருது, 'நிலம் பூத்து மலர்ந்த நாள்' நூலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இறுதி கடுமையான போட்டிகள் நிலவிய போதிலும்... இந்த நூலில் உள்ள அம்சங்களும் அதனை கே.வி.ஜெயஸ்ரீ மூல நூலை தழுவி சொல்லி இருக்கும் விதமும் அவர் விருது பெறுவதற்கு காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது.

click me!