HD தரத்தில் முந்தைய பட சாதனைகளை முறியடித்த சிம்பு படம்!! தமிழ்ராக்கர்ஸ் பிரமாண்ட ரிலீஸ்

Published : Feb 02, 2019, 07:15 PM IST
HD தரத்தில் முந்தைய பட சாதனைகளை முறியடித்த சிம்பு படம்!!  தமிழ்ராக்கர்ஸ் பிரமாண்ட ரிலீஸ்

சுருக்கம்

அண்டா அண்டாவாக பால் வேணும், பிரமாண்ட கேட் அவுட் வேணும்னு வீடியோவில் அடம்பிடித்த சிம்புவிற்கு வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தை, கொடுத்தால் HD தரத்தில் தான் கொடுப்போம் என ரிலீஸ் ஆன சில மணிநேரம் காத்திருந்து சுடச் சுட பிரிண்டை ரிலீஸ் பண்ணது தமிழ் ராக்கர்ஸ்.

சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் நேற்று தமிழகம் முழுவதும் வெளியானது வந்தா ராஜாவாத்தான் வருவேன் படம். ரம்யா கிருஷ்ணன், பிரபு, நாசர், கேதரின் தெரசா, மேகா ஆகாஷ் மற்றும் மகத் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

காமெடிக்காக,"யோகி பாபு, விடிவி கணேஷ், மொட்டை ராஜேந்திரன், ரோபோ சங்கர்" உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருக்கிறார்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இப்படம் ரிலீசாகியுள்ள இந்த படத்திற்கு சிம்பு கண்ணீர்விட்டு அண்டா பால் கேட்டதால், சிம்பு ரசிகர்கள் அவரது கட் அவுட்டிற்கு அண்டா அண்டாவாக பால் ஊற்றி  பாலாபிஷேகம் செய்தும் கொண்டாடி வருகின்றனர். 

இப்படத்தை தமிழகம் முழுவதும் உள்ள சிம்பு ரசிகர்கள் பார்த்து வரும் வேளையில், படக்குழுவினர் மற்றும் ரசிகர்களின் அதிர்ச்சிக்கு இப்படத்தை தமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் லீக் செய்தது. அதுவும் 
HD தரத்தில் முந்தைய படங்களை மிஞ்சும் அளவிற்கு பக்கா குவாலிட்டியில் ரிலீஸ் செய்திருப்பதால் படக்குழுவினர் உட்பட சிம்பு ரசிகர்களும் சோகத்தில் உள்ளனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Dhanush : பிரேக் அப் செய்து பிரிந்தார்களா தனுஷ் - மிருணாள் தாக்கூர்? காட்டுத்தீ போல் பரவும் தகவல்
Nooru Saami vs Engal Thangam Day 1 Box Office : சமந்தா vs விஜய் ஆண்டனி... முதல் நாள் வசூலில் வின்னர் யார்?