யாரும் என் தம்பியை திட்டாதீங்க! இது தான் உண்மை! நடிகர் சிம்பு கொடுத்த விளக்கம்!

By manimegalai aFirst Published Mar 18, 2019, 8:12 PM IST
Highlights

அரசியல் ஆசையே இல்லாத அஜித்தை, பிரபல இயக்குனர் சுசீந்திரன் நேற்று ட்விட்டர் பக்கத்தில், அரசியலுக்கு வரவேண்டும் என கூறியிருந்தார்.
 

அரசியல் ஆசையே இல்லாத அஜித்தை, பிரபல இயக்குனர் சுசீந்திரன் நேற்று ட்விட்டர் பக்கத்தில், அரசியலுக்கு வரவேண்டும் என கூறியிருந்தார்.

மேலும் இது தான் 100 சதவீத சரியான தருணம் என்றும், வா தலைவா மாற்றத்தை உண்டாக்கு என தன்னுடைய வேண்டுகோள் ஒன்றை அஜித்துக்கு வைத்தார். இவரின் இந்த பதிவுக்கு பலர் ஆதரவு தெரிவித்த நிலையில்,  நடிகர் டி ராஜேந்திரனின் மகனும்,  சிம்புவின் தம்பிமான குறளரசன் டுவிட்டர் பக்கத்தில் இருந்து சர்ச்சையை கிளப்பும் பதிவு ஒன்று வெளியானது.

அதில் "இவரு வேற குறுக்க மறுக்க ஓடிகிட்டு இருக்காரு" எங்க அப்பா தான்யா அடுத்த முதல்வர். என பதிவிட்டு அஜித்குமார் என்கிற பெயரும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

மேலும் மற்றொரு பதிவில் "உண்மை சில நேரங்களில் அற்ப நகைச்சுவையாக தோன்றும், தீபா பேரவையோடு சேர்ந்து லட்சிய திமுக 234 தொகுதிகளையும் கைப்பற்றும் என கூறியிருந்தார். இதைப் பார்த்து கோபமான அஜித் ரசிகர்கள் குறளரசனை கமெண்ட்டால் தாக்கிப் பேசினர்.

இதில் போலி டுவிட்டர் கணக்காக இருக்கலாம் என ஏற்கனவே நம் ஏசியாநெட் பக்கத்தில் கூறி இருந்தது போலவே... தற்போது  நடிகர் சிம்புவும் இது குரல் அரசனின் பெயரில் யாரோ ஒருவர் உருவாக்கிய போலி ட்விட்டர் கணக்கு என விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகியில் "குறளரசனின் கருத்து Kuran Arasan T.Rajendar என்கிற முகநூல் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது.

இது போலி கணக்கு என்றும் Kural Tr என்பதுதான் குறளரசனின் முகநூல் கணக்கு என்றும் சிம்பு தரப்பில் விளக்கம் சொல்லப்பட்டிருக்கிறது". இதனால் தற்போது கொஞ்சம் கூல் ஆகியுள்ளார் அஜித் ரசிகர்கள். 

click me!