சிம்பு வாங்கிய புது கார்! இத்தனை கோடியா?

By manimegalai a  |  First Published Sep 30, 2018, 10:39 AM IST

கடந்த சில வருடங்களாக டல் அடித்து வந்த சிம்புவின் மார்க்கெட் தற்போது மீண்டும் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. சிம்பு தற்போது மீண்டும் நடிப்பின் மீது தீவிர கவனம் செலுத்த துவங்கியுள்ளார். 


கடந்த சில வருடங்களாக டல் அடித்து வந்த சிம்புவின் மார்க்கெட் தற்போது மீண்டும் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. சிம்பு தற்போது மீண்டும் நடிப்பின் மீது தீவிர கவனம் செலுத்த துவங்கியுள்ளார். எப்போதும் ஷூட்டிங்கிற்கு லேட்டாக வருவார் என கூறியவர்கள் பலரையும் சரியான நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வந்து ஆச்சர்யப்படுத்தி வருகிறாராம்.

Tap to resize

Latest Videos

'அச்சம் என்பது மடமையடா', படத்திற்கு பிறகு இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான 'செக்க சிவந்த வானம்' திரைப்படம் வசூலில் சக்க போடு போட்டு வருகிறது. 

மேலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்பு படம் ரிலீஸ் ஆவதால் அவரது ரசிகர்கள் தியேட்டருக்கு படை எடுத்து வருகின்றனர்.

தன்னுடைய வெற்றியை நண்பர்களுடன் ஏற்கனவே கொண்டாடி மகிழ்ந்த சிம்பு, தற்போது இந்த வெற்றியின் அடையாளமாக தனக்கு பிடித்த Bentley Continental GT என்ற உயர்ரக காரை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் விலை சுமார் 4 கோடி ரூபாயாம்.

சினிமா பிரபலங்கள் பலர், உயர்ரக கார் வாங்குவது பெரிய விஷயம் இல்லை என்றாலும், இந்த செய்தியை சிம்பு ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். 

click me!