விஜய் சேதுபதி வாய்ப்பை கைப்பற்ற ரூட்டு போட்ட சந்தானம்..! சைடு கேப்பில் தட்டி தூக்கிய சிம்பு?

Published : Jul 28, 2021, 05:40 PM IST
விஜய் சேதுபதி வாய்ப்பை கைப்பற்ற ரூட்டு போட்ட சந்தானம்..! சைடு கேப்பில் தட்டி தூக்கிய சிம்பு?

சுருக்கம்

விஜய் சேதுபதி நடித்த வெற்றி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க தற்போது சிம்பு கமிட் ஆகியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.  

விஜய் சேதுபதி நடித்த வெற்றி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க தற்போது சிம்பு கமிட் ஆகியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி இயக்குனர் கோகுல் இயக்கத்தில் நடித்த 'இதற்க்கு தானே ஆசைப்பட்டாய் பாலா குமாரா' திரைப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்றது. காமெடி ஜர்னரில் எடுக்கப்பட்ட இந்த படத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நந்திதா நடித்திருந்தார். குமுதா மனதில் இடம் பிடிக்க விஜய் செய்வது செய்யும் காமெடி எல்லாம் ரசிகர்களை திரையரங்கில் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது.

இவர்களை தவிர, அஸ்வின் காக்குமான்னு, ஸ்வாதி, பசுபதி, லிவிங்ஸ்டன், சூரி, பட்டிமன்றம் ராஜா, எம்.எஸ்.பாஸ்கர், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்திருந்தனர். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குனர் கோகுல் திட்டமிட்டுள்ளார்.

அதன் படி இந்த படத்திற்கு 'கொரோனா குமார்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதியை மீண்டும் ஹீரோவாக நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவலில் விஜய் சேதுபத்தில் இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் மட்டும் தான் நடிக்கிறாராம். ஏற்கனவே சுமார் அரை டஜனுக்கு அதிகமான படங்கள் இவர் கையில் உள்ளதால் இந்த படத்தில் இவர் நடிக்கவில்லை என கூறப்படுகிறது.

இது ஒரு காமெடி ஸ்கிரிப்ட் என்பதால், இதில் ஹீரோவாக நடிக்க நடிகர் சந்தானத்திடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், இந்த படத்தை சிம்பு நடிப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி வெற்றிப்படத்தின் இரண்டாம் பாகத்தின் வாய்ப்புக்கு சந்தானம் ரூட் போட்ட நிலையில், சிம்பு தற்போது நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகாத நிலையில்... விரைவில் 'கொரோனா குமார்' குறித்த அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தளபதி விஜய்யின் 'ஜனநாயகன்' பட கதை இதுதானா? லீக்கான ஸ்டோரி... ஷாக் ஆன படக்குழு..!
கொளுத்திப்போட்ட அருணின் அம்மா.. முத்துவுக்கு வில்லியாக மாறிய சீதா - சிறகடிக்க ஆசை சீரியலில் எதிர்பாரா ட்விஸ்ட்