இது பெயருக்கு முன்னாடி இருக்குற இனிஷியலை மாத்துறதுக்கு சமம்... பிரபல நடிகரின் செயலால் இயக்குநர் கொந்தளிப்பு!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jul 28, 2021, 04:05 PM IST
இது பெயருக்கு முன்னாடி இருக்குற இனிஷியலை மாத்துறதுக்கு சமம்... பிரபல நடிகரின் செயலால் இயக்குநர் கொந்தளிப்பு!

சுருக்கம்

முறையாக அனுமதி பெற்று என் கதையின் கருவை என் பெயரை பயன்படுத்தாமல் வேறு ஒருவர் சொந்தம் கொண்டாடுவது ஒருவருடைய பெயருக்கு முன் உள்ள இனிஷியல் ஐ மாற்றுவதற்கு சமமானது.

உலக நாயகன் கமல் ஹாசனின் அண்ணனான சாருஹாசனை வைத்து தாதா 87 படத்தின் கதையை பிரபல நடிகர் நடிக்கும் படத்திற்காக திருடிவிட்டதாக அப்படத்தின் இயக்குநர் விஜய் ஸ்ரீஜி குற்றச்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கமலஹாசனின் அண்ணன் சாருஹாசனை வைத்து நான் எழுதி இயக்கி ஜி மீடியா  கலை சினிமாஸ்வுடன் இணைந்து தயாரித்த தாதா 87 படத்திற்கு தாங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி. தற்சமயம் பவுடர் ,பப்ஜி படங்களை இயக்கி வருகிறேன். நேற்று காலை YouTube  நடிகர் சாய்குமார் நடிப்பில் ஒன் பை டூ என்ற பெயரில் தாதா87 படத்தின் ரீமேக் செய்யப்பட்டது அறிந்து அதிர்ச்சி அடைந்தேன் .

ரஜினியின் காலா டீசருடன் தாதா 87 படத்தின் டீசர் உலக அளவில் ட்ரெண்டிங்கில் இருந்தது அனைத்து சினிமா ரசிகர்களும் அறிவார்கள் அதே டீசரில் சாருஹாசன் காட்சிக்கு பதில் சாய்குமார் சில காட்சிகள் மட்டும் படமெடுத்து டீஸராக வெளியிட்டுள்ளார்கள். இதனை பார்த்து மிகுந்த மன உளைச்சல் அடைந்தேன். 1/2 படக்குழு  என்னுடைய   கற்பனையும் என் உழைப்பையும் திருடும் செயலில் இந்த சம்பவம் இருக்கிறது என்னிடம் முறையாக எந்தவிதமான அனுமதியும் பெறாமல் செய்திருப்பது சாய்குமார் போன்ற மிகப்பெரிய நடிகர் துணையுடன் நடந்து இருப்பது வருந்தத்தக்கது.

முறையாக அனுமதி பெற்று என் கதையின் கருவை என் பெயரை பயன்படுத்தாமல் வேறு ஒருவர் சொந்தம் கொண்டாடுவது ஒருவருடைய பெயருக்கு முன் உள்ள இனிஷியல் ஐ மாற்றுவதற்கு சமமானது.என பெரியவர்கள் கூறுவார்கள். தற்போது இதுபோல் பல படங்களுக்கு தொடர்ந்து கதை  திருட்டு நடைபெற்று வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் படமாக தாதா87 படத்தின் கருவை சிதைத்த நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஜு மீடியா கம்பெனி வழக்கறிஞர்கள் அறிவுறுத்தலின் படி நீதிமன்றம் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளோம் இதை பற்றி விரிவான செய்திகளை விரைவில் அறிவிப்பேன் என எச்சரிக்கை விடுத்துள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நான் யாரையும் திருமணம் செய்யவில்லை - பட்டாஸ் பட நடிகை மெஹ்ரீன் ஆவேசம்!
மாதம்பட்டி ரங்கராஜ் ஜாமினில் வெளியே வரமுடியாதபடி வழக்குப்பதிவு... ஜாய் கிரிசில்டாவின் அடுத்த அதிரடி