
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என்பதையும் கடந்து வெற்றி நாயகனாக வலம் வருகிறார் தனுஷ். அசுரன், கர்ணன், ஜகமே தந்திரம் என அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து அசத்தியுள்ளார். அத்தோடு இந்தியில் ‘அட்ரங்கி ரே’, ஹாலிவுட்டில் ‘தி கிரேமேன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி தமிழில் அண்ணன் செல்வராகவனுடன் ‘நானே வருவேன்’, கார்த்திக் நரேன் உடன் ‘மாறன்’, தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா உடன் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகும் ஒரு படம் என செம்ம பிசியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் தனுஷுக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். காமென் டி.பி., ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் என சோசியல் மீடியாவிலும் தனுஷ் பிறந்தநாள் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. அந்த வகையில் இயக்குநர் இமயம் பாரதிராஜா தனுஷ் பிறந்தநாளுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “திரையில் தோன்றும் ஒரு சில கதாபாத்திரங்கள்நம்மையும் அறியாமல் நமக்குள் ஊடுறவி நம் உணர்வோடு, உறவோடு பின்னப்பட்டாதாய் அமைந்துவிடும்.
ஆனால் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நபரின் உண்மையான குண நலன்கள் நிஜ வாழ்க்கையில் முற்றிலும் நேர்மாறாக இருப்பதை கண்டு நாம் அதிர்ச்சியில் உறைந்துவிடுவதுண்டு. நிஜ வாழ்க்கையில் எப்படியோ.. அதை திரையிலும் பிரதிபலிப்பவர்கள் ஒரு சிலரே... அதில் உன்னை நான் முதன்மையானவனாகப் பார்க்கிறேன். எளிமை,, தன்னடக்கம், விருதுகள் வென்று குவித்தாலும் நான்" என்கின்ற அகந்தை அற்ற பணிவு.. சிறந்த கலை தொழில் நுட்ப அறிவு இது போதும் டா.. இன்னும் நூறு உலக விருதுகள் உன் வீட்டு கதவைத் தட்டும். பேரன்புமிக்க "தங்க மகன்" தனுஷ் இன்றைய நன் நாளில் எல்லா வளங்களும் பெற்று சீருடன் சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.