
பிக்பாஸ் விளையாட்டில் கலந்து கொண்டுள்ள நடிகர் மஹத் சிம்புவின் நெருங்கிய நண்பர் என்பது நாம் அறிந்தது தான். ஆனால் நடிகர் சிம்பு 'பிக்பாஸ்' வீட்டிற்குள் உள்ள மஹத்தையும், நண்பன் மஹத்தையும் எப்படி பார்க்கிறார் என்கிற கேள்விக்கு அவரே பிரபல பத்திரிக்கைக்கு பதில் கொடுத்துள்ளார்.
இது குறித்து கூறியுள்ள சிம்பு 'அவனே ஓப்பனாதானே இருக்கான். அதுதான் எல்லோருக்கும் பிரச்னையா இருக்கு. 'அவனுக்கு கேர்ள் ஃப்ரெண்ட் இருக்குனு எல்லோருக்கும் தெரியும்.
சரி... உனக்கு ஒரு கேர்ள் ஃப்ரெண்ட் இருந்து, வேறொரு பெண்ணை நீ தொட்டா... உன் கேர்ள் ஃப்ரெண்ட் செவுல்லேயே விடும். அவன் கேர்ள் ஃப்ரெண்ட் அப்படியில்லை. அது ஏன் மற்றவர்களுக்கு கஷ்டமா இருக்குனு எனக்கு புரியல. பிடிக்காத ஒரு பெண்ணை அவன் கையைப் பிடிச்சு இழுத்தா, அதைத் தப்புனு சொல்லலாம். அவன் அப்படி எதுவுமே பண்ணலையே என கூறியுள்ளார்.
அதே போல் சிம்புவோட நண்பன் என்பதால் தான் மஹத் இப்படி இருப்பதாக அடிப்படும் ஒரு பேச்சுக்கு, பதில் அளித்துள்ள சிம்பு. "போன சீசனின் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த ஹரீஷ் கல்யான் கூட என்னுடைய நண்பன் தான். அவர் ஒழுங்காக தானே இருந்தார்.
ஒருவேளை மஹத் ஏதாவது தப்பு செய்தால் அவர் சட்டையை பிடிச்சி கேள்வி கேட்பேன். அப்படி எதுவும் அவன் பண்ணலையே உதரணத்துக்கு, ஒரு பொண்ணு குறைவான ஆடை போட்டிருக்குனு நீங்க கேள்வி கேட்டா, அந்தப் பொண்ணுமேலே எந்தத் தப்பும் இல்லை. பார்க்கிற பார்வையில் தான் தப்பு உள்ளது என கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.