தீபிகாவை தொடர்ந்து முத்தக்காட்சி குறித்து ஓபன் டாக் செய்த சித்தாந்த் சதுர் வேதி... அந்த இடத்திலேயே பயந்தாரு?

Kanmani P   | Asianet News
Published : Feb 14, 2022, 08:55 PM IST
தீபிகாவை தொடர்ந்து முத்தக்காட்சி குறித்து ஓபன் டாக் செய்த சித்தாந்த் சதுர் வேதி... அந்த இடத்திலேயே பயந்தாரு?

சுருக்கம்

தீபிகா படுகோன் முத்தக்காட்சி தொடர்பாக தனது கணவர் தவறாக நினைத்து கொள்ள மாட்டார் என கூறியிருந்த நிலையில்..தற்போது 'கெஹ்ரையான்'.பட நாயகன் சித்தாந்த் சதுர்வேதி முத்தக்காட்சி குறித்து ஓப்பன் டாக் செய்துள்ளார்.. 

பாலிவுட் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோன். கன்னட மொழியில் வெளியான ஐஸ்வர்யா என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். இந்தியில் ஓம் ஷாந்தி ஒம் படத்தின் மூலம் அறிமுகமானவர் தீபிகா படுகோன். அங்கு பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். தொடர்ந்து பாலிவுட் சினிமா பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் தீபிகா படுகோன் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் கோச்சடையான் படத்தில் நடித்துள்ளார்.

பாலிவுட் மட்டுமின்றி சர்வதேச அளவில் புகழ் பெற்ற நடிகையாக வலம் வரும் நடிகை தீபிகா படுகோன் சிறந்த நடிகைக்கான உலக சாதனையாளர் விருதை வென்ற முதல் இந்திய நடிகை என்ற பெருமையைப் பெற்றுள்ளார். நடிகை தீபிகா படுகோன் கடந்த 2018ஆம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது இவர் பிரபாஸுக்கு ஜோடியாக பான் இந்தியா படமொன்றில் நடித்து வருகிறார். இதுதவிர பாலிவுட்டில் கெஹ்ரயான் என்கிற படத்திலும் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற பிப்ரவரி 11-ந்தேதி ஓடிடி-யில் ரிலீசாக உள்ளது. ஷகுன் பத்ரா இயக்கிய கெஹ்ரையன், நவீன கால உறவுகளின் நாடகம். தீபிகா படுகோன் மற்றும் சித்தாந்த் சதுர்வேதி தவிர, படத்தில் அனன்யா பாண்டே , தைரிய கர்வா, நசிருதீன் ஷா மற்றும் ரஜத் கபூர் ஆகியோர் நடித்துள்ளனர்.  இந்த படத்தின் ட்ரெய்லரில், தீபிகாவும் அவருடன் நடித்த சித்தாந்த் சதுர்வேதியும் முத்தங்களைப் பகிர்ந்துகொள்வதைக் காணலாம். இந்த காட்சிகளுக்கு ரன்வீர் கபூர் அனுமதி பெறப்பட்டதா என சமீபத்திய பேட்டி ஒன்றில் தீபிகாவிடம் கேட்கப்பட்டுள்ளது..

இந்த கேள்விக்கு பதிலளித்த தீபிகா படுகோன்..மற்ற நடிகர்களுடன் நெருக்கமாக நடிப்பது குறித்து ரன்வீரின்  மிகவும் பெருமையாக நினைக்கிறார் என தான் நினைப்பதாகவும்... மேலும் தனது நடிப்பைப் பற்றி அவர் மிகவும் பெருமைப்படுகிறார் என்றும் கூறியுள்ளார்..

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தீபிகாவுடன் நெருக்கமாக நடித்தது குறித்து சித்தாந்த் சதுர் வேதி கூறுகையில், "இந்த படத்தின் கதையைக் கேட்ட உடனேயே நடிக்க ஒப்புக் கொண்டேன். காரணம் என்னுடன் ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார் என்பதுதான்.

கதையின் படி படத்தில் முத்தக்காட்சிகள் முழுக்க இடம் பெற்றுள்ளது. இந்த காட்சியில் தீபிகா படுகோனேவுடன் நடிக்க மிகவும் பயந்தேன். இத்தனை நெருக்கமான முத்தக்காட்சிகள் அவசியம்தானா? என டைரக்டர் ஷகுனிடமும் கேட்டேன். பின்னர் கதைக்கு அவசியம் என்பதால் அந்த காட்சிகளில் பதற்றத்துடனே நடித்து முடித்தேன். என கூறியுள்ளார்.. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!
2025-ஆம் ஆண்டு லோ பட்ஜெட்டில் உருவாகி... மிகப்பெரிய வசூலை வாரி சுருட்டிய டாப் 5 படங்கள்!