'ஸ்கிரிப்ட் தரல, ஷூட்டிங் இன்னும் ஆரம்பிக்கல' சங்கமித்ராவிலிருந்து எஸ்கேப் ஸ்ருதி விளக்கம்...

 
Published : May 30, 2017, 05:24 PM ISTUpdated : Sep 19, 2018, 12:41 AM IST
'ஸ்கிரிப்ட் தரல, ஷூட்டிங் இன்னும் ஆரம்பிக்கல' சங்கமித்ராவிலிருந்து எஸ்கேப் ஸ்ருதி விளக்கம்...

சுருக்கம்

Shruti Haasan opts out of Sangamithra after promoting it at Cannes Film Festival

பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாகத் தயாராகும் படம் சங்கமித்ரா. 8-ம் நூற்றாண்டில் நடக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ள இந்தக் கற்பனைக் கதையில் சங்கமித்ரா என்ற பேரழகி அவளது ராஜ்ஜியத்தைக் காப்பாற்ற அவள் கடந்து வரும் பாதைகளும், சோதனைகளும், துயரங்களுமே இந்தப் படத்தின் ஒன் லைன் என்று கூறப்படுகிறது. இந்த முக்கிய கேரக்டரில் நடிக்க இருந்த ஸ்ருதிஹாசன் தற்போது படத்திலிருந்து விலகியுள்ளதாகப் படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தது.

பாகுபலிக்கு அடுத்து இந்தப்படம்தான் என சங்கமித்ராவைக்காட்டி, ஃபர்ஸ்ட்-லுக் போஸ்டரையே கான்ஸ் விழாவில் நடத்தி தங்களது சங்கமித்ரா டீம். பிரான்ஸுக்கு நேரில் சென்று பில்டப் விட்டு இன்னும் பத்து நாள் கூட ஆகாதா நிலையில் படக்குழுவில் இத்தனை சீக்கிரம் இவ்வளவு பிளவுகள் உண்டாகும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

கான்ஸ் விழாவில் சங்கமித்ராவைப்பற்றி அதிகம் பேசியது ஏ.ஆர்.ரஹ்மானும் ஸ்ருதிஹாசனும் தான். சங்கமித்ரா படத்துக்காக ஸ்ருதிஹாசன் லண்டனில் வாள் சண்டை, குதிரை சவாரி ஆகியவற்றுக்குப் பயிற்சி எடுத்துவந்தார். 

இந்நிலையில் தவிர்க்கமுடியாத சூழ்நிலைகளினால் சங்கமித்ரா திரைப்படத்தில் ஸ்ருதிஹாசனுடன் பயணிக்கமுடியவில்லை என தேனாண்டால் ஃபிலிம்ஸ் நிறுவனம் டிவிட்டரில் அறிவித்திருக்கிறது. அது என்ன தவிர்க்கமுடியாத சூழ்நிலை. ஸ்ருதிஹாசனுடனான ஒப்பந்தத்தின்படி ஜூலை - ஆகஸ்ட்டில் சங்கமித்ரா திரைப்படத்தைத் தொடங்கி விரைவில் முடித்துவிடுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், Pre Production வேலைகளுக்காக செப்டம்பர், அக்டோபர் வரை படப்பிடிப்பு தள்ளிப்போனதால் ஸ்ருதிஹாசனின் கால்ஷீட்டுடன் இந்த மாற்றம் முரண்பட்டது. கால்ஷீட் தேதிகளை ஸ்ருதி மாற்றமுடியாது எனத் தெளிவாகச் சொல்லிவிட்டதால் அவரை சங்கமித்ராவிலிருந்து எடுத்துவிட்டார்கள். 

தற்போது விலகலுக்கான காரணம் குறித்து ஸ்ருதிஹாசன் தரப்பிலிருந்து அவரது மக்கள் தொடர்பாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘துரதிர்ஷ்டவசமாகச் சங்கமித்ராவில் பங்காற்ற வேண்டாம் என்ற முடிவை ஸ்ருதிஹாசன் எடுக்கும் நிலையில் உள்ளார். இந்தப் படம் எவ்வளவு பெரியது, 2 வருடங்கள் படப்பிடிப்புக்கான தேதிகள் என அனைத்தும் தெரிந்தே ஸ்ருதிஹாசன் நடிக்க வந்தார். தனது கதாபாத்திரத்துக்கான பயிற்சி, முழு வடிவத் திரைக்கதை மற்றும் முறையான படப்பிடிப்பு தேதிகள் ஆகியவை குறித்த முக்கியத்துவம் அவருக்குத் தெரியும்.

படப்பிடிப்புக்குத் தயாராக, ஏப்ரல் மாதத்திலிருந்து சிறந்த சண்டைப் பயிற்சியாளரிடம் பயிற்சி பெற ஆரம்பித்துவிட்டார். ஆனால், 'சங்கமித்ரா' படத்தின் மீது அவருக்கிருந்த ஆர்வம், அர்ப்பணிப்பு ஆகியவற்றைத் தாண்டி, இந்த முடிவை எடுக்கவேண்டியிருந்தது. முழுமையான ஸ்கிரிப்ட் அவருக்குத் தரப்படவில்லை. படப்பிடிப்பு தேதிகளும் சரியாக முடிவு செய்யப்படவில்லை. இதுவே அவரது முடிவுக்குக் காரணம்.

ஸ்ருதி, தற்போது, அவர் நடித்துள்ள பெஹன் ஹோகி தேரி பாலிவுட் படத்தின் விளம்பர வேலைகளில் இருக்கிறார். தொடர்ந்து 'சபாஷ் நாயுடு' படத்துக்காக தயாராகிவருகிறார்" என்று தெரிவித்துள்ளார்கள். தற்போது ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக யார் நடிக்கவுள்ளார்கள் என்பது விரைவில் அறிவிப்போம் என்று படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நீங்க திருவிழாவை நடத்துங்க நடத்தாமல் போங்க.! கரகத்தை தூக்குங்க தூக்காம போங்க.! எங்களுக்கு பார்ட் 2 வேணும்.?
மீனாவுக்கு இது தேவையா? அடுத்த பஞ்சாயத்து மீனாவுக்கு தானா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் டுவிஸ்ட்!