காலா கரிகாலன் படப்பிடிப்புக்கு திடீர் சிக்கல் - கதையை உரிமை கோரி வழக்கு...

 
Published : May 30, 2017, 02:16 PM ISTUpdated : Sep 19, 2018, 12:41 AM IST
காலா கரிகாலன் படப்பிடிப்புக்கு திடீர் சிக்கல் - கதையை உரிமை கோரி வழக்கு...

சுருக்கம்

The shooting problem for rajini kaala film - in case

பா.ரஞ்சித் இயக்கத்தில்  ரஜினியின் நடிப்பில் உருவாகி வரும் காலா கரிகாலன் திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் மும்பையில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறி உள்ளநிலையில் சென்னையைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் காலா திரைப்படத்தின் மூலக்கரு மற்றும் தலைப்பு தன்னுடையது என்று சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில் G.s.r விண்மீன் கிரியேஷன் மூலம் கடந்த 1996 ஆம் ஆண்டு தென்னிந்திய திரைப்பட பதிவு அலுவலகத்தில்  கரிகாலன் என்ற பெயரில் தனது படத்திற்கான தலைப்பை பதிவு செய்தேன்.இத்திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்தை வைத்து இயக்க விரும்பினேன். அப்போதைய  ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி சத்தியநாராயணா முலம் ரஜினியை சந்தித்து இது குறித்து விளக்கம் அளித்தேன். 

ஆனால் அவரோ பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று மட்டும் கூறி புகைப்படம் எடுத்து அனுப்பிவிட்டார். இதற்கிடையே கரிகாலன் என்ற என்னுடைய தலைப்பையும், கதைக்கருவையும் தயாரிப்பாளர் தனுஷ், இயக்குநர் ரஞ்சித் ஆகியோர் திருடி படத்தை எடுக்க உள்ளனர்.எனவே இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகளுக்கு உடனடியாக தடை விதித்து நடவடிக்கை எடுக்கும்படி இக்கடிதம் கேட்டு கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கதை மற்றும் திரைப்படத்தின் பெயரை உரிமை கோரி நாகராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்திருப்பதால், காலா படத்தின் படப்பிடிப்பு பணிகள் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.....

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நீங்க திருவிழாவை நடத்துங்க நடத்தாமல் போங்க.! கரகத்தை தூக்குங்க தூக்காம போங்க.! எங்களுக்கு பார்ட் 2 வேணும்.?
மீனாவுக்கு இது தேவையா? அடுத்த பஞ்சாயத்து மீனாவுக்கு தானா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் டுவிஸ்ட்!