
நடிகைகள் 30 வயதை கடந்து விட்டாலே, அவர்களுடைய திருமணம் எப்போது என்பதை அறிந்து கொள்வதில் ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். அதிலும் காதலன் இருந்தால், திருமணம் குறித்து ஒவ்வொரு முறையும் கேள்வி எழுப்புவதை பத்திரிக்கையாளர்களும் வாடிக்கையாக வைத்துள்ளனர்.
நடிகைகளுக்கு இந்த கேள்வி கடுப்பேற்றினாலும், சிரித்து கொண்டே தங்களுடைய திருமண செய்து குறித்த கேள்விக்கு பதில் கொடுத்து வருகிறார்கள்.
அந்த வகையில் நடிகை ஸ்ருதிஹாசன், திருமணம் எப்போது என தொடர்ந்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், தற்போது தனக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என்றும், படங்கள் நடிப்பதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் எப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என எப்போது நினைக்கிறேனோ... அப்போது, கண்டிப்பாக அனைவரிடமும் கூறி திருமணம் செய்து கொள்வேன் என தன்னுடைய திருமண பிளான் குறித்து பேசியுள்ளார்.
மேலும் ஸ்ருதிஹாசன், நீண்ட இடைவெளிக்கு பின், நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து எந்த அதிகார பூர்வா தகவலும் வெளியாகவில்லை.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.