பல வருட ஆசை நிறைவேறாமலேயே மரணமடைந்த இயக்குனர் மகேந்திரன்!

Published : Apr 03, 2019, 12:11 PM IST
பல வருட ஆசை நிறைவேறாமலேயே மரணமடைந்த இயக்குனர் மகேந்திரன்!

சுருக்கம்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்தவர் மகேந்திரன். குறிப்பிட்ட சில படங்களை மட்டுமே இயக்கி இருந்தாலும், இவர் இயக்கத்தில் வெளியான 'உதிரி பூக்கள்', 'முள்ளும் மலரும் என ஒவ்வொரு படங்களும், ரசிகர்கள் மனதில் இன்றுவரை நீங்காத இடத்தை பிடித்துள்ளது.  

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்தவர் மகேந்திரன். குறிப்பிட்ட சில படங்களை மட்டுமே இயக்கி இருந்தாலும், இவர் இயக்கத்தில் வெளியான 'உதிரி பூக்கள்', 'முள்ளும் மலரும் என ஒவ்வொரு படங்களும், ரசிகர்கள் மனதில் இன்றுவரை நீங்காத இடத்தை பிடித்துள்ளது.

கதாசிரியராக திரையுலகில் காலடி எடுத்து வைத்த இவர், வசனகர்த்தா, இயக்குனர், நடிகர் என பல்வேறு திறமைகளாலும் ரசிகர்களை மகிழ்வித்தவர்.

கடந்த சில மாதங்களாக உடல் நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த இவர், திடீரென கடந்த வாரம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த தகவலை அவருடைய மகன் ஜான் மகேந்திரன் வெளியிட்டு, தன்னுடைய தந்தைக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும் என ரசிகர்களிடம் கூறினார்.

இந்நிலையில் நேற்று காலை இயக்குனர் மகேந்திரன் காலமானார். இவரின் மரணம் திரையுலகினர் மத்தியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. 

மேலும் தமிழ் திரையுலகை சேர்ந்த ரஜினி, கமல், மோகன், விஜய் சேதுபதி, இளையராஜா, மணிரத்னம், சுஹாசினி, என பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில்,  இயக்குனர் மகேந்தரனின் நிறைவேராத பலவருட ஆசை என்ன என்பது தற்போது வெளியாகியுள்ளது. அதாவது எழுத்தாளர் புதுமைப்பித்தன் எழுதிய நாவல் ஒன்றினை,  அடிப்படையாகக் கொண்டு திரைப்படம் ஒன்றை இயக்க வேண்டும் என்பது தானம்.

இந்த படத்திற்கு இளையராஜா தான் இசை அமைக்க வேண்டும் என்பதையும் மனதில் வைத்திருந்தாராம. ஆனால் இந்த ஆசை கடைசி வரை நிறைவேறாமலே இம்மண்ணுலகை விட்டு மறைந்துவிட்டார் மகேந்திரன்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பயங்கரமான அப்டேட் உடன் ஆட்டத்தை ஆரம்பிக்கும் பராசக்தி... டிசம்பர் 18ந் தேதி ரெடியா இருங்க..!
பொறுமையை சோதிக்கப்போகிறாரா விஜய்...? ஜன நாயகன் ரன் டைம் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்