டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கும் ஷ்ரத்தா...!

Published : Oct 06, 2018, 03:48 PM IST
டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கும் ஷ்ரத்தா...!

சுருக்கம்

தமிழகத்தில் காலியாக உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்  தலமைச்செயலாளர் கேட்டுக் கொண்டதால் தற்போது தேர்தல் இல்லை என டெல்லியில் தலமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் அறிவித்தார்.

தமிழகத்தில் காலியாக உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்  தலமைச்செயலாளர் கேட்டுக் கொண்டதால் தற்போது தேர்தல் இல்லை என டெல்லியில் தலமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் அறிவித்தார்.

2010ஆம் ஆண்டு வெளியான டீன் பட்டி படத்தில் அறிமுகமாகியிருந்தாலும், 2013ஆம் ஆண்டு வெளியான ஆஷிக்-2 படம் அவருக்கு பேசும்படியாக அமைந்தது. கடந்த மாத இறுதியில் பாலிவுட்டில் வெளியாகி கவனம் பெற்றிருந்த `ஸ்ட்ரீ' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவாலின் பயோ-பிக்கில் நடித்து வருகிறார் ஷ்ரத்தா.

கடந்த மாதம் 27ஆம் தேதி இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு உண்டானது. இதன் காரணமாக அவரால் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாமல் போனது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் ரத்த பரிசோதனை செய்ததில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது. ஷ்ரத்தா கபூர் விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்து வருவதாக அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளனர்.

இதுகுறித்து ஷ்ரத்தா, “தயவு செய்து கவலைப்படாதீர்கள். விரைவில் குணமாகி வருவேன். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி” என்று தனது இன்ஸ்டகிராமில் தெரிவித்துள்ளார்.

மேலும், “கடந்த சில மாதங்களாக ஓய்வின்றி உழைத்து வரும் ஷ்ரத்தா, தனது உடல் நலனுக்காகக் கொஞ்ச நாள் ஓய்வெடுத்துக் கொண்டதாகத் தெரிகிறது. விரைவில் அவர் குணமடைந்து படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என நாங்கள் ஆவலாக உள்ளோம்” என்று சாய்னா படத்தின் தயாரிப்பாளர் பூஷன் குமார் மும்பை மிரருக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி
டிரக் டிரைவராக இருந்த அவதார் டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன்... பில்லியனர் இயக்குனர் ஆனது எப்படி?