உதவி குறித்து அறிவிப்பதாக தெரிவித்த ராகவா லாரன்ஸ்! கடைசில் இப்படி சொல்லிட்டாரே..? ஷாக் ஆன ரசிகர்கள்!

Published : Apr 11, 2020, 05:23 PM IST
உதவி குறித்து அறிவிப்பதாக தெரிவித்த ராகவா லாரன்ஸ்! கடைசில் இப்படி சொல்லிட்டாரே..? ஷாக் ஆன ரசிகர்கள்!

சுருக்கம்

தமிழ் சினிமாவில், உள்ள பிரபலங்களிலேயே மிகவும் அதிக தொகையான 3 கோடி நிதி உதவியை மக்களுக்காக அறிவித்தவர், பிரபல நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ்.   

தமிழ் சினிமாவில், உள்ள பிரபலங்களிலேயே மிகவும் அதிக தொகையான 3 கோடி நிதி உதவியை மக்களுக்காக அறிவித்தவர், பிரபல நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ். 

அஜித் 1 . 25 கோடி வழங்கிய நிலையில், அவரை தொடர்ந்து நடிகர் ராகவா லாரன்ஸ், பிரதமரின் நிதிக்கு,முதலமைச்சரின் நிதிக்கு, மாற்று திறனாளிகளுக்கு, பெப்சி தொழிலாளர்களுக்கு, தின கூலி ஊழியர்களுக்கு, நடன இயக்குனர்கள் சங்கத்திற்கு என மொத்தம் 3 கோடி நிதியை அறிவித்தார்.

இதுவரை தமிழ் திரையுலகை சேர்ந்த யாரும் கொடுத்திடாத பெரிய, தொகையை லாரன்ஸ் கொடுத்து உதவியது பலருடைய பாராட்டுகளையும் இவருக்கு பெற்று தந்தது. இதை தொடர்ந்து மூன்று கோடியை அடுத்து மீண்டும் உதவி செய்ய உள்ளதாகவும் இன்று மாலை அந்த உதவி பற்றி அறிவிக்க உள்ளதாகவும் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது...  " மக்களுக்கு கொடுத்த நிதிக்காக அனைவரும் தன்னை மனதார பாராட்டியதாகவும் அவர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்... என தெரிவித்துள்ளார்.

மேலும் சிலரிடம் இருந்து உதவி கேட்டு தனக்கு போன் மூலம் கோரிக்கை வந்ததாகவும் கூறியுள்ளார். ஒரு கட்டத்தில் தன்னால் அழைப்புகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை என்பதால் தன் உதவியாளர்களிடம் தான் பிசியாக இருப்பதாக சொல்ல சொல்லியதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

பின்னர் தன்னுடைய அறைக்கு சென்று யோசித்த போது...  பொதுமக்கள் பசியால் அழுது கொண்டிருப்பதை கேள்விப்பட்டு எனக்கு தூக்கமே வரவில்லை. பலர் உணவாரா உதவியாக இருந்த கோவில்கள் கூட தற்போது மூடப்பட்டு விட்டது. பசியுடன் இருப்பவர்களுக்கு உதவுவது கடவுளுக்கு சேவை செய்வதற்கு சமம். 

மேலும் உதவிகள் செய்வதற்காக  தன்னுடைய ஆடிட்டருடன் ஆலோசனை செய்து வருவதாகவும் , இன்று மாலை 5 மணிக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக அவர் கூறியுள்ளார். குறிப்பாக " இந்த பூமியில் நாம் பிறக்கும்போது எதையும் கொண்டு வரவில்லை" என்று ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது ராகவா லாரன்ஸ் கஷ்டப்பட்டு வரும் மக்களுக்கு எந்த மாதிரியான உதவிகளை செய்யப்போதாக சொல்வார் என இவருடைய ரசிகர்கள் மற்றும் மக்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில், இவர் கூறியுள்ள பதில் சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, எந்த மாதிரியான உதவிகள் மக்களுக்கு தேவை என்பது பற்றி ஆலோசித்து வருவதாகவும், அதற்கு தனக்கு இரு தினங்களாவது தேவை என்றும், அதனால் தமிழ் புத்தாண்டான ஏப்ரில் 14 ஆம் தேதி அன்று தன்னுடைய உதவிகள் பற்றி தெரிவிக்க உள்ளதாக ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார். 

என்ன இப்படி சொல்லிட்டாரே கடைசியில் என சிலர் நினைத்தாலும்... ஆற்றில் கொட்ட வேண்டும் என்றாலும் அளந்து தான் கொட்ட வேண்டும் என்கிற பழ மொழியையும் சும்மா சொல்லவில்லையே... பெரியவர்கள்! கொஞ்சம் நினைத்து பாருங்க பாஸ்... அவர் சொல்றதும் ரைட் தான்..

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தன்னுடைய திரையுலக கதாநாயகன் அஜித் குமாரை சந்தித்த நடிகர் சிம்பு!
பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!