லீக் ஆனது சூர்யாவின் NGK பட டீஸர்... செல்வராகவனின் வெறித்தனமான டீஸர்னா இது தான்...

Published : Feb 14, 2019, 11:40 AM ISTUpdated : Feb 14, 2019, 11:41 AM IST
லீக் ஆனது சூர்யாவின் NGK பட டீஸர்...  செல்வராகவனின் வெறித்தனமான டீஸர்னா இது தான்...

சுருக்கம்

சூர்யாவின் என்.ஜி.கே. பட டீஸர் வெளியாகியுள்ளது. செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடித்துள்ள என்.ஜி.கே.. படம் கடந்த தீபாவளிக்கே ரிலீஸாக வேண்டியது. செல்வராகவனுக்கு திடீர் என்று உடல்நலம் பாதிக்கப்பட்டதால் படப்பிடிப்பு தள்ளிப்போனது.

என்.ஜி.கே  படம் குறித்த சரியான அப்டேட் விடாததால் ரசிகர்களுக்கு வருத்தம் என்றாலும், செல்வராகவனாச்சே அதான் ரசிகர்களும் காத்திருந்தனர். இந்நிலையில் என்.ஜி.கே. - நந்த கோபாலன் குமரன் பட டீஸர் காதலர் தினமான இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.  

இந்நிலையில், என்.ஜி.கே. டீஸரை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்பே அதாவது இன்று வெளியாக இருந்த நிலையில் அதை யாரோ ட்விட்டரில் லீக் செய்தனர். 8 நொடி காட்சிகள் கசிந்தது. இதையடுத்து டீஸர் ரிலீஸ் நேரம் பிப்ரவரி 14ம் தேதி மாலை 6 மணிக்கு பதில் இன்று காலை 10.30 மணிக்கு மாற்றப்பட்டது. என்.ஜி.கே. டீஸரை சூர்யா வெளியிட்டுள்ளார். 

டீச்சரின் தொடக்கத்தில், என் பெயர் நந்த கோபாலன் குமரன் என்று சூர்யா கூறுவதுடன், முழுக்க முழுக்க அரசியல் படம் என்பதால் கருணாநிதி, வைகோ, சோனியா, நல்லகண்ணு, வாஜ்பாய் போன்ற அரசியாக தலைவர்கள் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. ஆனால், ஜெயலலிதா படம் இல்லை.  டீஸரை வெளியிடும் முன்பே லீக்கானது சூர்யா ரசிகர்களை வருத்தம் அடைய வைத்துள்ளது. ஆனாலும், இந்த டீஸர் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரல்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!