இல்லத்தரசிகளுக்கு ஷாக் கொடுத்த “சித்தி-2” சீரியல்... வெளியான அதிர்ச்சி தகவல்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Aug 03, 2020, 04:19 PM IST
இல்லத்தரசிகளுக்கு ஷாக் கொடுத்த “சித்தி-2” சீரியல்... வெளியான அதிர்ச்சி தகவல்...!

சுருக்கம்

தற்போது ஷூட்டிக் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சித்தி 2 சீரியல் நடிகர், நடிகைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

சினிமாவில் பிரபலமாக இருப்பவர்கள் சின்னத்திரையிலும் கால் பாதித்து, அசுர வளர்ச்சி அடையாளம் என்பதை நிரூபித்தவர் ராதிகா சரத்குமார். "கண்ணின் மணி கண்ணின் மணி" என தொடங்கும் பாடலும், சித்தி என ஒலிக்கும் சிறுமியின் செல்ல சினுங்களும் அனைவரது இல்லத்தையும் ஆக்கிரமித்தது. 1999 முதல் 2001ம் ஆண்டு வரை ஆண், பெண் பேதமின்றி அனைவரையும் தொலைக்காட்சி முன்பு காட்டி போட்டு வைத்தது. 

 

 

இதையும் படிங்க: சிம்பிள் புடவை... தலை நிறைய மல்லிகைப்பூ... வைரலாகும் நயன்தாராவின் அடக்க ஒடுக்கமான போட்டோ...!

இந்நிலையில் 22 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சித்தி - 2 தொடர் ஒளிபரப்பானது. இந்த தொடரிலும் ராதிகா ஹீரோயினாக நடித்து வருகிறார். சித்தி தொடரை போலவே இந்த தொடரிலும் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். பொன்வண்ணன், ஷில்பா, மஹாலக்ஷ்மி, நிகிலா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வந்தனர். இடையில் கொரோனா பிரச்சனை காரணமாக அனைத்து விதமான படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டதால், தொழிலாளர்கள் மிகப்பெரிய பிரச்சனைகளை சந்திக்க ஆரம்பித்தனர். இதையடுத்து அரசிடம் தங்களது தரப்பு பிரச்சனைகளை எடுத்துரைத்த சின்னத்திரை நிர்வாகிகள் படப்பிடிப்பிற்கான அனுமதியை பெற்றனர். 

 

 

அதன் பின்னர் ஒரிரு நாட்கள் ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில்,  கொரோனாவின் தாக்கம் குறையாததால் ஜூன் 19 முதல் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது. இதனிடையே அரசு அறிவித்த தளர்வுகளை அடுத்து மீண்டும் ஜூலை 8ம் தேதி முதல் ஷூட்டிங்குகளை நடத்திக்கொள்ளலாம் என பெப்சி சங்கம் அறிவித்தது. 

 

 

இதையும் படிங்க: இரண்டாவது கணவருக்கு அவசர திருமணம்... சீரியல் நடிகை போலீசில் பரபரப்பு புகார்...!

தற்போது ஷூட்டிக் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சித்தி 2 சீரியல் நடிகர், நடிகைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். அதன்படி பொன்வண்ணன் கேரக்டரில் நிழல்கள் ரவி, நிகிலா ராவ் கேரக்டரில் காயத்ரி யுவராஜ், ஷில்பா கதாபாத்திரத்தில் ஜெயலட்சுமி ஆகியோர் நடிக்க உள்ளது தெரியவந்தது. அதுமட்டுன்றி விரைவில் நியூ எபிசோட்களை காணலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார். 

 

 

இதையும் படிங்க: உடைந்தது தாய் சங்கம்... உதயமானது புதிய தயாரிப்பாளர்கள் சங்கம்... பாரதிராஜா அதிரடி அறிவிப்பு...!

ஆனால் தற்போது வரை நியூ எபிசோட் குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. சித்தி 2 சீரியல் குறித்த கிராபிக்ஸ் காட்சிகளை செய்து முடிக்க கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறதாம். அதுமட்டுமின்றி தரத்தில் எவ்வித சமரசமும் செய்து கொள்ள கூடாது என்பதிலும் படக்குழுவினர் தெளிவாக உள்ளார்களாம். அதனால் ஆகஸ்ட் 10ம் தேதி இரவு 9.30 மணி முதல் சித்தி - 2 தொடரின் புதிய எபிசோட் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கொங்குநாட்டை அதிரவிட்ட விஜய்... ஈரோட்டில் தளபதி எடுத்த மாஸ் செல்பி வீடியோ வைரல்
தன்னோட வாழ்க்கைக்கே வழிய காணோம்; இதுல தங்கச்சிக்கு அட்வைஸ் பண்ணும் தங்கமயில்!