
நடிகர் ஷாம் உட்பட 13 பேரை, போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில், தளபதி விஜய் நடித்த 'குஷி' படத்தின் மூலம் ஒரு சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் ஷாம். பின்னர் 12பி , ஏய் நீ ரொம்ப அழகா இருக்க, லேசா லேசா, இயற்க்கை, உள்ளம் கேட்குமே, உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். இவருக்கென தனி ரசிகர்களும் உள்ளனர்.
தமிழை தவிர, தெலுங்கு, கன்னடம். மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். மேலும் கடந்த 2013 ஆண்டு வெளியான 6 மெழுகு வத்திகள் படத்தை தயாரித்து நடித்திருந்தார்.
மேலும் செய்திகள்: வாவ்... இது தான் ஆக்ஷன் கிங் அர்ஜுன் வீடா...! வேற லெவல் இன்டீரியர் ஒர்க்...! அசந்துடுவீங்க வாங்க பார்க்கலாம்!
இந்நிலையில் நடிகர் ஷாம், அவருக்கு சொந்தமாக சென்னை நுங்கம்பாக்கம், ஸ்டெர்லிங் சாலையில் அமைந்துள்ள அடுக்கு மாடி குடியிருப்பில், அடிக்கடி பணம் வைத்து சீட்டு விளையாடி, சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனால் நேற்றிரவு, போலீசார் திடீர் என, நடிகர் ஷாமுக்கு சொந்தமாக உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள வீடுகளை திடீர் என சோதனை செய்தனர். அதில் ஒரு வீட்டில் நடிகர் ஷாம் உட்பட 13 பேர், சீட்டு விளையாடி சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக அவர்களை கைது செய்தனர்.
மேலும் செய்திகள்: மூக்கில் டியூப்... பரிதாபமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகை விஜயலட்சுமி! அதிர்ச்சி புகைப்படம்!
அதே போல் இவர்களிடம் இருந்து, அவர்கள் வைத்து விளையாடிய பணம் மற்றும் சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை செய்த போது, இங்கு சீட்டு விளையாடுவதற்காக பல இயக்குனர்கள், நடிகர்கள், தொழிலதிபர்கள் வருவது வழக்கம் என்று, இந்த வீட்டை நடிகர் ஷாம், சூதாட்ட கிளப் போல் வைத்திருந்ததும் தெரிய வந்துள்ளது.
இரவு நேரத்தில் போலீசார் பிரபல நடிகர் உட்பட 13 பேரை கைது செய்துள்ள சம்பவம், தமிழ் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.