உள்ளே வந்த ஷிவானி... ஆசையாக சென்ற பாலாஜிக்கு காத்திருந்த அதிர்ச்சி..! விறுவிறுப்பான புரோமோ...

Published : Jan 15, 2021, 11:17 AM IST
உள்ளே வந்த ஷிவானி... ஆசையாக சென்ற பாலாஜிக்கு காத்திருந்த அதிர்ச்சி..! விறுவிறுப்பான புரோமோ...

சுருக்கம்

பிக்பாஸ் வீட்டில் அனைத்து போட்டியாளர்களும் நேற்று ஒன்று கூடி, கலகலப்பாக பொங்கல் திருவிழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் பிக்பாஸ் கொடுத்த 5 லட்ச ரூபாயை எடுத்து கொண்டு கேப்ரில்லா வெளியேறியது பலரை அதிர்ச்சியடைய வைத்தது. இந்நிலையில் இன்றைய முதல் புரோமோவில் ஷிவானி பிக்பாஸ் வீட்டிற்குள் வரும் காட்சி காட்டப்படுகிறது.  

இறுதி போட்டிக்கு செல்வார்... என எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளர்களில் ஒருவர், சீரியல் நடிகை ஷிவானி. ஆனால் குறைந்த வாக்குகளை பெற்றதால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் இன்றைய தினம் சர்பிரைஸாக பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வருகிறார் ஷிவானி.

பாய் ஒன்றால் சுத்தப்பட்டு, ஸ்டோர் ரூம் வழியாக வீட்டிற்குள் விசிட் அடிக்கும் ஷிவானியை பார்த்து, சக போட்டியாளர்கள் உற்சாகமாய் அவரை கட்டி அணைந்து வரவேற்கிறார்கள். பாலாஜி ஷிவானி வந்ததை அறிந்து அவரை காண ஆவலோடு வருகிறார். ஆனால் ஷிவானியோ பாலா எதிரே நிற்பதை கூட கண்டு கொள்ளாமல் அர்ச்சனாவை ஓடி சென்று கட்டி பிடிக்கிறார்.

ஷிவானியிடம் இருந்து இதனை சற்றும் எதிர்பார்க்காத, பாலாஜி அதிர்ச்சியில் அங்கிருந்து நகர்வது தான் தற்போதைய புரோமோவில் வெளியாகியுள்ளது.  

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வில்லி தான் ஜெயிக்கிறாள்! 'கார்த்திகை தீபம்' சீரியல் கதையால் ரசிகர்கள் கொதிப்பு: கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!
பிக்பாஸ் ஜூலியுடன் முதல் முறையாகக் கைகோர்த்த வருங்கால கணவர்: வைரல் கிளிக்ஸ்!