ஜாதி பற்றி பேசி சர்ச்சை..! மன்னிப்பு கேட்டார் நடிகை ஷில்பா ஷெட்டி!

 
Published : Dec 25, 2017, 02:39 PM ISTUpdated : Sep 19, 2018, 01:44 AM IST
ஜாதி பற்றி பேசி சர்ச்சை..! மன்னிப்பு கேட்டார் நடிகை ஷில்பா ஷெட்டி!

சுருக்கம்

shipa shetty controversy talk

நடிகர் பிரபு தேவா நடித்த 'ரோமியோ' திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களால் நன்கு அறியப்பட்டவர் பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன் பிரபல நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வரும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். 

அப்போது பேசிய அவர் ஒரு குறிப்பிட்ட ஜாதி குறித்து கருத்து தெரிவித்தார். இவர் கூறிய கருத்திற்கு அந்த ஜாதியை சேர்ந்த ஒரு சிலர், ஷில்பா ஷெட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து.

மும்பை மற்றும் ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் இவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மேலும் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் சல்மான் கான் மற்றும் ஷில்பா ஷெட்டி மீது மும்பை காவல்துறையினரிடம் புகாரும் கொடுக்கப்பட்டது. 

இந்நிலையில் நடிகை ஷில்பா ஷெட்டி தான் கூறிய கருத்திற்கு சம்மந்தப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் கூறியுள்ளது: நான் பேசிய சில வார்த்தைகள் தவாறாக அர்த்தம் கொள்ளப்பட்டிருகிறது, எனக்கு யாருடைய உணர்வையும் காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஒரு வேலை நான் கூறிய வார்த்தைகள் உங்களை காயப்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்... பல்வேறு சாதி, சமயங்களை கொண்ட இந்த நாட்டில் வழ்வதேயே பெருமையாக கருதுகிறேன் என்றும் ஒவ்வொருவரையும் நான் மதிக்கிறேன் என ஷில்பா ஷெட்டி கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!
கொங்குநாட்டை அதிரவிட்ட விஜய்... ஈரோட்டில் தளபதி எடுத்த மாஸ் செல்பி வீடியோ வைரல்