
அண்மை காலமாக பல தொழிலதிபர்கள் மற்றும் பாலிவுட் திரையுலகத்தை சேர்ந்த ஒரு சில நடிகர். நடிகைகள் பிட்காயினில் முதலீடு செய்வதாக சமூக வலைத்தளத்தில் பரவலாக செய்திகள் வெளியாகி வருகிறது.
தற்போது பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மற்றும் அவருடைய மகன் அபிஷேக் பச்சான் ஆகிய இருவரும் பிட்காயினில் முதலீடு செய்து 100 மில்லியன் டாலர் இழந்துள்ளதாகவும் தெரிகிறது.
இவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஹைதராபாத்தை சேர்ந்த நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்துள்ளனர். தற்போது அந்த நிறுவனத்தில் பிட்காயின் உட்பட சில கரன்சிகளையும் முதலீடு செய்யும் பணிகள் தற்போது செய்து வருவதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த பங்குகளின் மதிப்பு பல மடங்கு உயர்ந்தது. இதனால் அந்த நிறுவனத்தில் இரண்டு சதவீதத்திற்கும் மேல் பங்கு வைத்துள்ள பச்சன்களுக்கு அதிக பணம் கிடைத்துள்ளது.
தற்போது பிட்காயின் மதிப்பு குறையத் துவங்கி உள்ளது. பிட்காயினின் மதிப்பு குறைய துவங்கிய நிலையில் அமிதாப்பச்சன் குடும்பத்தாருக்கு தற்போது $100 மில்லியனுக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.