தருமபுரி அருகே குட் பேட் அக்லி பட நடிகர் குடும்பத்தோடு விபத்தில் சிக்கினார் - ஒருவர் பலி

Published : Jun 06, 2025, 10:23 AM IST
shine tom chacko father car accident death

சுருக்கம்

மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, குடும்பத்தோடு பெங்களூரு சென்றுகொண்டிருந்தபோது தருமபுரி அருகே அவர் சென்ற கார் விபத்துக்குள்ளானது.

Shine Tom Chacko Family Met With an Accident Near near Dharmapuri : நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை சி.பி. சாக்கோ கார் விபத்தில் மரணமடைந்தார். ஷைன் டாமும் அவரது குடும்பத்தினரும் பயணித்த கார் தருமபுரி அருகே விபத்துக்குள்ளானது. இன்று அதிகாலை திருச்சூரில் இருந்து பெங்களூரு சென்று கொண்டிருந்த போது தருமபுரியை அடுத்த பாறையூரில் சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் ஷைன் டாமின் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. ஷைன் டாம், அவரது தந்தை, தாய், சகோதரர் மற்றும் உதவியாளர் ஆகியோர் காரில் இருந்தனர்.

விபத்தில் சிக்கிய ஷைன் டாம் சாக்கோ

படுகாயம் அடைந்த இவர்கள் தர்மபுரியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஷைன் டாமும் அவரது குடும்பத்தினரும் பயணித்த கார் ஒரு லாரி மீது மோதியது. இதில் ஷைனின் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கர்நாடக பதிவு எண் கொண்ட லாரியின் பின்புறம் கார் மோதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து நடந்தபோது யார் காரை ஓட்டிச் சென்றார்கள் என்பது உறுதியாகத் தெரியவில்லை. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஷைன் டாம் சாகோவின் தந்தை பலி

காவல்துறையினரும், பொதுமக்களும் இணைந்து விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். நேற்று இரவு திருச்சூரில் இருந்து பெங்களூருவுக்குப் புறப்பட்டனர். மருத்துவ பரிசோதனைக்காக ஷைன் டாம் சாக்கோ அவரது பெற்றோரை பெங்களூருக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. செல்லும் வழியில் தான் இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது. மரணமடைந்த ஷைன் டாம் சாகோவின் தந்தை சி.பி. சாக்கோ. சமீபத்தில் ஷைனுடன் சில நேர்காணல்களிலும் பங்கேற்றிருந்தார்.

நடிகர் ஷைன் டாம் சாக்கோ மலையாளத்தில் பிரபலமான நடிகராக வலம் வருகிறார். இவர் தமிழிலும் நடிகர் விஜய்யின் பீஸ்ட் படம் மூலம் அறிமுகமானார். கடைசியாக அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்திருந்தார் ஷைன் டாம் சாக்கோ. இதுதவிர சமீப காலமாக மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய போதைப் பொருள் வழக்கிலும் ஷைன் டாம் சாக்கோ கைதாகி பின்னர் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: அப்பாவை கட்டிப்பிடித்து கதறி அழுத சரவணன் : கூலா வேடிக்கை பார்த்த மயில்!
டபுள் எவிக்‌ஷன்... பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் காலியாகப்போகும் 2 விக்கெட் யார்?